இலங்கை தற்கொலைப்படை தீவிரவாதிகளின் மில்லியன் கணக்கான பணம், சொத்துக்கள் கண்டுபிடிப்பு... வெளியான முக்கிய தகவல்

Report Print Raju Raju in இலங்கை

இலங்கை குண்டுவெடிப்பில் தொடர்புடைய தற்கொலைப்படை தீவிரவாதிகளுக்கு சொந்தமான ரூ. 140 மில்லியன் பணத்தை பொலிசார் கண்டெடுத்துள்ளனர்.

இலங்கையில் கடந்த 21ஆம் திகதி ஈஸ்டர் தினத்தன்று தற்கொலைப்படை தீவிரவாதிகள் குண்டுவெடிப்பு தாக்குதல் நடத்தினார்கள்.

இந்த தாக்குதலில் 253 பேர் கொல்லப்பட்டனர்.

இந்நிலையில் தற்கொலைப்படை தாக்குதலில் தொடர்புடைய தீவிரவாதிகளுக்கு சொந்தமான இலங்கை ரூபாய் மதிப்பில் 140 மில்லியனை பொலிசார் தற்போது கண்டெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தீவிரவாதிகளின் வங்கி வைப்பு தொகையும் இதில் அடக்கம் என தெரியவந்துள்ளது.

மேலும் ரூ. 7 பில்லியன் மதிப்பிலான சொத்துக்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இவை அனைத்தையும் முடக்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக காவல்துறை செய்தி தொடர்பாளர் கூறியுள்ளார்.

மேலும் இலங்கை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers