எங்கள் பாதுகாப்புக்காக வாருங்கள்! மிகவும் பாதிக்கப்பட்டுள்ளோம்.... தமிழில் மனம் உருக பிரார்த்தனை செய்த மக்கள்

Report Print Raju Raju in இலங்கை

இலங்கையில் தீவிரவாத தாக்குதல் நடந்த நிலையில் மட்டக்களப்பில் உள்ள சமுதாய கூடத்தில் மக்கள் ஒன்று கூடி மனமுருக பிரார்த்தனையில் ஈடுபட்டார்கள்.

இலங்கையில் 8 இடங்களில் கடந்த 21ஆம் திகதி நடந்த குண்டுவெடிப்பில் 253 பேர் கொல்லப்பட்டனர்.

மட்டக்களப்பில் உள்ள சியோன் தேவாலயத்திலும் தாக்குதல் நடத்தப்பட்டது.

இந்த தேவாலயத்தை மீண்டும் பயன்படுத்துவதற்கு முன்னர் அதிகம் பழுது பார்க்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் மட்டக்களப்பில் உள்ள சமுதாய கூடத்தில் நேற்று காலை பிரார்த்தனை கூட்டம் நடைபெற்றது.

இதில் கலந்து கொண்ட மக்கள் பலர் கண்ணீர் மல்க பிரார்த்தனை செய்தனர்.

எங்கள் பாதுகாப்புக்காக வாருங்கள், நாங்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளோம் என கடவுளை நோக்கி தமிழில் சிலர் பாடல்களை பாடியபடி பிரார்த்தித்தனர்.

அதே போல நம் தேசத்தை அழிக்க நினைக்கும் சாத்தான்களிடம் இருந்து எங்களை காப்பாற்றுங்கள் என மனமுருக வேண்டினார்கள்.

குண்டுவெடிப்பில் காயம் அடைந்தவர்களுக்கும் சிறப்பு பிரார்த்தனை செய்யப்பட்டது.

அதாவது, அருள் பிரசாந்த் (30) என்பவர் தான் காயமடைந்த நிலையிலும் மற்றவர்களை காப்பாற்றிய பின்னரே கீழே மயங்கி விழுந்தார்.

சுமதி கருணாகரன் (52) என்ற பெண்ணுக்கு குண்டுவெடிப்பின் போது பலத்த காயம் ஏற்பட்டது, சுவர் ஏறி குதித்த நிலையிலேயே அவர் உயிர் பிழைத்தார்.

நேற்று நடந்த பிரார்த்தனை கூட்டத்தில் கண்களில் கட்டு போடப்பட்ட நிலையில் அவர் கலந்து கொண்டார்.

மேலும் இலங்கை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...