48 மணி நேரத்துக்குள் ஒப்படைக்க வேண்டும்.... இலங்கையில் பொலிசார் விடுத்த காலக்கெடு எதற்காக?

Report Print Raju Raju in இலங்கை

இலங்கையில் பொதுமக்கள் சட்டவிரோதமாக தாங்கள் வைத்துள்ள வாள்கள், கத்திகள் உள்ளிட்ட கூரிய ஆயுதங்களை காவல் நிலையத்தில் ஒப்படைக்க காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது.

அதன்படி சட்டவிரோதமாக வைத்துள்ள கூரிய ஆயுங்களை 48 மணி நேரத்துக்குள் அருகிலுள்ள காவல் நிலையத்தில் ஒப்படைக்க வேண்டும் என காவல்துறை ஊடகம் சார்பில் கேட்டு கொள்ளப்பட்டுள்ளது.

ஏதேனும் கூரிய ஆயுதங்கள் தொடர்பில் சட்ட விளக்கத்தை அளிக்க முடியுமாயின், அவ்வாறான ஆயுதங்களை ஒப்படைக்க தேவையில்லை என காவல்துறை ஊடகப் பேச்சாளர் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் அனைத்து போலிஸ் நிலையங்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கையில் நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலை தொடர்ந்து நடத்தப்பட்ட விசேட சோதனை நடவடிக்கைகளின் போது, பெருந்திரளான வாள்கள், கத்திகள் உள்ளிட்ட கூரிய ஆயுதங்கள் மீட்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மேலும் இலங்கை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers