மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள மண்முனை - ஒல்லிக்குளம் எனும் பகுதியில் தற்கொலை குண்டுதாரிகள் பயிற்சி பெற்ற இடத்தி பொலிசார் முற்றுகையிட்டனர்.
குறித்த இடம் யாசீன் பாவா அப்துல் ரஊப் என்பவருக்கு சொந்தமானது என்பதால் அவரை கைது செய்துள்ள பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தற்கொலைக் குண்டுத் தாக்குதலுக்கான பயிற்சிகள் இந்த இடத்திலிருந்தே பெறப்பட்டிருக்கக் கூடும் என பொலிசார் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.
சாய்ந்தமருது தற்கொலைக் குண்டுவெடிப்பில் பலியான சஹ்ரானின் சகோதரர் ரிஸ்வான் என்பவர், 2017ம் ஆண்டு இந்த இடத்தில் ஆயுதப் பயிற்சி பெற்றார் என்றும், அதன் போது தவறுதலாக இடம்பெற்ற குண்டுவெடிப்பில், கை விரல்களையும், கண் ஒன்றினையும் ரிஸ்வான் இழந்தார் என்றும் விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.