நீர் கொழும்பில் நடந்தது என்ன? தற்போதைய நிலை

Report Print Deepthi Deepthi in இலங்கை

கொழும்பு புறநகர் பகுதியான நீர்கொழும்பு போருதோட்ட பகுதியில் நேற்றிரவு இரண்டு குழுக்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதலை அடுத்து அமைதியின்மை ஏற்பட்டிருந்த நிலையில் தற்போது நிலைமை தணிந்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

நேற்று வாகனங்கள் உள்ளிட்டவைகள் கொளுத்தப்பட்டன மற்றும் வர்த்தக நிலையங்களுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு ஏற்பட்ட அமைதியின்மையை அடுத்து, நீர்கொழும்பில் இன்று காலை 7 மணி வரை ஊடரங்கு சட்டம் அமல்படுத்தப்பட்டு இன்று காலை அது நீக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், நிலைமை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.

நிலைமை சுமூகமாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. போக்குவரத்துகள் வழக்கும்போல செயல்படுகின்றன.

ட்விட்டர் தவிர்த்த ஏனைய சமூக வலைத்தளங்களே நேற்றிரவு முதல் முடக்கப்பட்டன.

இந்நிலையில் இன்று 9 காலை மணி முதல் சமூகவலைதளங்கள் மீதான முடக்கம் நீக்கப்பட்டது.

மேலும் இலங்கை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers