உயிருடன் இருக்கும் பிரதான தற்கொலை குண்டுதாரி? சஹ்ரான் ஹசிமின் மரணத்தில் சந்தேகம்

Report Print Arbin Arbin in இலங்கை

கொழும்பில் தொடர் தற்கொலை தாக்குதல்களை முன்னெடுத்த பிரதான சூத்திரதாரி சஹ்ரான் ஹசிமின் மரணத்தில் சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக புலனாய்வுப்பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

ஈஸ்டர் தினத்தன்று ஷங்கிரிலா ஹொட்டலில் நடத்தப்பட்ட தற்கொலை குண்டு தாக்குதலில் அவர் கொல்லப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

எனினும் அவர் உயிரிழக்கவில்லை என தற்போது புலனாய்வுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஷங்கிரிலா ஹொட்டலுக்கு சஹ்ரான் வந்த போதிலும் அவர் தற்கொலை குண்டுத்தாக்குதலில் உயிரிழக்க வில்லை என புலனாய்வு பிரிவினர் சந்தேகம் வெளியிட்டுள்ளளர்.

அதற்கு பதிலாக ரிமோட் கொண்டு குண்டை வெடிக்க வைப்பதற்கு சஹ்ரான் நடவடிக்கை மேற்கொண்டிருக்கலாம் என சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

அது தொடர்பான வீடியோவில் உள்ள தற்கொலை குண்டுதாரியின் உடலுக்கும், சஹ்ரானின் உண்மையான புகைப்படங்களுக்கும் இடையில் வித்தியாசங்கள் உள்ளதாக புலனாய்வு பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதன் உண்மை தன்மையை அறிவதற்காக DNA பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

தேசிய தவ்ஹித் ஜமாத் அமைப்பின் தலைவரும் ஐ.எஸ் பயங்கரவாதிகளின் ஆதரவை பெற்றவருமான சஹ்ரான் தற்கொலை குண்டுதாக்குதல் மேற்கொள்வதற்காக கடும் பயிற்சிகளை அளித்துள்ளார்.

சஹ்ரான் தனது அமைப்பிற்கு இரண்டாவது தலைவர் ஒருவரை பெயரிடவில்லை. தனது அமைப்பிற்கு பணிகளை வழங்கிய சஹ்ரான் தற்கொலை குண்டுத்தாக்குதலில் உயிரிழப்பதற்கான சாத்தியங்கள் இல்லை என புலனாய்வு பிரிவு தெரிவித்துள்ளது.

சஹ்ரான் இன்னமும் உயிருடன் இருப்பார் எனவும், வேறு வழியில் அவர் பயங்கரவாத நடவடிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருக்கலாம் எனவும் புலனாய்வு பிரிவு நம்புவதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் இலங்கை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers