இலங்கை குண்டுவெடிப்பு: பயங்கரவாதிகள் உடல்களை புதைக்க இடம் தரமாட்டோம்... உலமா சபை திட்டவட்டம்.

Report Print Abisha in இலங்கை

சாய்ந்தமதுரு பொலிவேரியன் பகுதியில் பயங்கரவாத நடவடிக்கையில் ஈடுபட்ட தற்கொலைபடைதாரிகளின் உடல்களை அடக்கம் செய்ய இடம் தரமாட்டோம் என்று ஜும்ஆ பள்ளிவாசல் உலமா சபை அறிவித்துள்ளது.

இது குறித்து சாய்ந்தமருது வர்த்தக சபை மற்றும் பொதுமக்களுடன் இணைந்து இந்த அறிவித்தலை வெளியிட்டுள்ளது.

இது குறித்து செய்தியாளர்களுக்கு பேசிய அந்த சபை நிர்வாகிகள், ”பயங்கரவாத நடவடிக்கையில் ஈடுபட்டு இந்த நாட்டில் இல்லாத அளவில் அமைதியின்மையை ஏற்படுத்திய நபர்கள் எவரின் உடல்களையும் பள்ளிவாசல் பொறுப்பேற்காது.

மேலும், அந்த சடலங்களை இந்த பகுதியை சார்ந்த எந்த இடத்திலும், அடக்கம் செய்யவும் இடமளிக்கமாட்டோம்." என்று அவர்கள் தெரிவித்தனர்.

மேலும் "ஸியாரம் (புனிதர்களை அடக்கம் செய்த இடம்) அமைந்துள்ள பள்ளிவாசல்களை இலக்கு வைத்து விஷமிகளின் தாக்குதல் நடைபெறலாம் என போலீஸார் எச்சரித்துள்ளனர். எனவே, ஸியாரம் அமைந்துள்ள எமது பள்ளிவாசல்களை பாதுகாக்கும் பல நடவடிக்கைகளை எடுக்கப்பட்டுள்ளது" என்றனர்.

மேலும் இலங்கை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...