வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கை மக்களுக்கு உலகத்தமிழர்கள் உதவி செய்ய வேண்டும்: சீமான்

Report Print Deepthi Deepthi in இலங்கை

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கை மக்களுக்கு உலக தமிழர்கள் உதவி செய்ய வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.

அவர் கூறுகையில், இலங்கையில் பெய்த பெருமழையினால் ஏற்பட்ட வெள்ளத்தால் பெரும் சேதத்தை ஈழ மக்கள் சந்தித்திருக்கிறார்கள்.

போரினாலும், நீரினாலும் தொடர் பேரழிவைச் சந்தித்துவருகிற நம் ஈழ சொந்தங்கள் துவண்டு நிற்கிறார்கள்.

இந்த இக்கட்டான சூழலில் இருந்து நம் மக்களை மீட்க வேண்டிய கடமையும், உரிமையும் நமக்குக் கையளிக்கப்பட்டிருக்கிறது.

அதன் காரணமாக தமிழகத்திலிருந்தும், உலகெங்கிலும் வாழும் தமிழர்களிடமிருந்தும் நம்மால் இயன்ற உதவிகளைச் செய்து, இந்தத் துயரத்திலிருந்து அவர்களை மீட்க வேண்டும்.

அவர்களைத் தத்தளிக்க விடாமல் கைதூக்கிவிடவேண்டிய பொறுப்பு நமக்கு இருக்கிறது. அதைச் சிறப்பாக செய்துமுடிப்போம் என தெரிவித்துள்ளார்.

மேலும் இலங்கை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers