ஒடுதளத்தில் உரசிச்சென்ற இலங்கை விமானம்! அச்சத்தில் உறைந்த பயணிகள்: உடனடியாக மேலே எழுப்பிய விமானி

Report Print Deepthi Deepthi in இலங்கை

திருச்சி விமான நிலையத்திற்கு வந்த இலங்கை விமானம் ஒடுதளத்தை உரசி சென்ற சம்பவம் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.

நேற்று காலை கொழும்பிலிருந்து ஸ்ரீலங்கா ஏர்லைன்ஸ் விமானம் 125க்கும் மேற்பட்ட பயணிகளுடன் திருச்சி விமான நிலையத்திற்கு வந்துள்ளது.

காலை 9.25 மணிக்கு அந்த விமானம் தரையிறங்க வேண்டும். விமானம் வந்தபோது வானிலை மோசமாக இருந்தது.

நேற்று காலையில் இருந்தே தொடர் மழை பெய்துகொண்டிருப்பதால், விமானிக்கு ஓடுதளம் சரியாக தெரியவில்லை .

இருப்பினும் விமானி விமானத்தை தரையிறக்கினார். அப்போது விமானம் ஒரே பக்கமாக சாய்ந்தபடி இறங்கியதால், விமானத்தின் இடது இறக்கை தரையில் உரசியபடி விமானம் தாழ்வாக சென்றது. இதனால் பயணிகள் அச்சத்தில் உறைந்தனர்.

இதனால் சுதாரித்துக்கொண்ட விமானி, விமானத்தை மேலே எழுப்பினார். மீண்டும் கொழும்புக்கு விமானம் திரும்பிச் சென்றது. வானிலை சீரானதையடுத்து காலை 11 மணிக்கு மீண்டும் அந்த விமானம் திருச்சிக்கு வந்து பத்திரமாக தரையிறங்கியது.

கடந்த மாதம் ஏர்இந்தியா விமானம் விமானநிலையத்தின் சுற்றுச்சுவரை இடித்து கொண்டு வானில் பறந்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

மேலும் இலங்கை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...