இலங்கை அரசியலை உன்னிப்பாக கவனித்து வருகிறோம்: இந்திய வெளியுறவுத்துறை கருத்து

Report Print Kabilan in இலங்கை

இலங்கையில் நடைபெற்று வரும் அரசியல் மாற்றம் குறித்து உன்னிப்பாக கவனித்து வருவதாக, இந்திய வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.

இலங்கையில் பிரதமராக இருந்த ரணில் விக்ரமசிங்கேவை, அந்நாட்டின் ஜனாதிபதி சிறிசேனா அதிரடியாக நீக்கினார். அவருக்கு பதிலாக ராஜபக்சேவை பிரதமராக நியமித்து, பதவி பிரமாணம் செய்து வைத்தது, அந்நாட்டு அரசியலில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியது.

ஆனால், ரணில் விக்ரமசிங்கே இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், தனது பதவியை பறிக்க அதிகாரம் இல்லை என அறிவித்தார்.

இந்நிலையில் இதுகுறித்து இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் கருத்து தெரிவித்துள்ளது. அண்டை நாடான இலங்கையில் நடைபெற்று வரும் அரசியல் மாற்றத்தை, உன்னிப்பாக கவனித்து வருவதாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இதுதொடர்பாக கூறுகையில், ‘ஜனநாயகம் மற்றும் நெருங்கிய அண்டையான நாடு என்ற வகையில், ஜனநாயகம் மற்றும் அரசியலைப்பு செயல்முறைகள் மதிக்கப்படும் என்று நம்புகிறோம்.

இலங்கை மக்களுக்கு தேவையான உதவிகளை செய்ய, இந்தியா எப்போதும் தயாராக இருக்கிறது’ என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இலங்கை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers