இலங்கை வந்த தமிழக அமைச்சரை புகழ்ந்து தள்ளிய மக்கள்! என்ன காரணம் தெரியுமா?

Report Print Santhan in இலங்கை

இலங்கை வந்த தமிழக அமைச்சர் செங்கோட்டையனுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் 102-வது பிறந்த நாள் விழா, இலங்கையில் உள்ள அவரின் சொந்த ஊரான கண்டியில் நடைபெற்றது.

இதற்காக தமிழக அமைச்சர் செங்கோட்டையன் அங்கு சென்றார். அப்போது அவருக்கு அங்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

தமிழக அரசு பள்ளி கல்வி முறையில் சிறப்பு திட்டங்கள் மற்றும் பல்வேறு அதிரடியான மாற்றங்களை செங்கோட்டையன் கொண்டு வந்ததையடுத்து,பள்ளிக்கல்வித்துறையில் கலக்குவதாக இலங்கை மக்கள் புகழாரம் சூட்டினர்.

அதை தொடர்ந்து, இதயக்கனி நாளிதழ் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த எம்.ஜி.ஆர். தொடர்பான புகைப்படக் கண்காட்சியையும் அமைச்சர் செங்கோட்டையன் திறந்து வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் வேலுகுமார், இலங்கை அமைச்சர்கள் பங்கேற்றனர்.

அதன் பின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த செங்கோட்டையன், எம்.ஜி.ஆர் பிறந்த ஊரில் தான் காலடி எடுத்து வைத்தது பெருமையாக உள்ளது இதற்கு வாய்ப்பளித்த இலங்கை அரசுக்கு நன்றி தெரிவிப்பதாக கூறினார்.

தமிழக மீனவர் பிரச்சனை தொடர்பாக, இலங்கை மீன்வளத்துறை அமைச்சர் விஜயமுனி சொய்யாவுடன் ஆலோசித்ததாகவும் கூறினார்.


மேலும் இலங்கை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers