கருணாநிதி நலம்பெற இலங்கை ஜனாதிபதி சிறிசேனா வாழ்த்து கடிதம்!

Report Print Vijay Amburore in இலங்கை

சென்னை காவேரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள கலைஞர் கருணாநிதி விரைவில் குணமடைய வேண்டி இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வாழ்த்து கடிதம் அனுப்பியுள்ளார்.

தமிழக அரசியலில் மிகப்பெரிய ஆளுமையும், 50 ஆண்டுகால அரசியல் வாழ்க்கையில் வெற்றியை மட்டுமே தனதாக்கி கொண்ட திமுக தலைவர் கலைஞர் கருணாநிதி கடந்த 4 நாட்களுக்கு முன்பு சிறுநீரக நோய்த்தொற்று மற்றும் ரத்த அழுத்தத்தினால் மோசமான நிலைக்கு தள்ளப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அவரை பார்ப்பதற்காக ஏராளமான அரசியல் தலைவர்களும், தொண்டர்களும் மருத்துவமனை வளாகம் முன்பு குவிந்த வண்ணம் உள்ளனர்.

இந்த நிலையில் இலங்கையிலிருந்து கருணாநிதியின் நலம் குறித்து விசாரிப்பதற்காக மருத்துவமனைக்கு வருகை தந்திருந்த இலங்கை எம்.பிக்கள் ஆறுமுகன் தொண்டமான் மற்றும் அமைச்சர் செந்தில் தொண்டமான், கருணாநிதியின் உடல்நலம் குறித்து ஸ்டாலினிடம் கேட்டறிந்ததோடு, இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா எழுதிய வாழ்த்து கடிதத்தையும் ஒப்படைத்தனர்.

இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசுகையில், உலகத் தமிழர்களின் தலைவரான கருணாநிதி விரைவில் நலம் பெற வேண்டி இறைவனிடம் பிரார்த்திக்கிறோம் என தெரிவித்தனர்.

மேலும் இலங்கை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்