பிரபல தனியார் தொலைக்காட்சியில் எங்கள் வீட்டு மாப்பிள்ளை என்ற நிகழ்ச்சி நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட 16 பெண்களில் ஒருவரை ஆர்யா திருமணம் செய்து கொள்வார்.
தற்போது நிகழ்ச்சி இறுதி கட்டத்தை எட்டியுள்ளதால், சில பெண்கள் மட்டுமே உள்ளனர். அந்த பெண்களின் ஒவ்வொருவரின் வீட்டிற்கு சென்று நடிகர் ஆர்யா அவர்களின் குடும்பம் மற்றும் உறவினர்களை பற்றி தெரிந்து வருகிறார்.
கேரளா, கும்பகோணம் சென்ற ஆர்யா தற்போது இலங்கை பெண்ணான சுசனாவின் வீட்டிற்கு சென்றது தொடர்பான நிகழ்ச்சி ஒளிபரப்பப்பட்டது.
அப்போது ஆர்யா முதலில் யாழ்ப்பாணத்தில் இருக்கும் சுசனாவின் உறவினர் ஒருவரின் வீட்டிற்கு சென்றார். அப்போது அங்கிருந்த உறவினர் ஒருவர், எப்போது வேண்டுமானாலும் ஷெல் தாக்குதல் நடக்கும், இறந்தவர்களின் உடல்களை எரிக்க கூட நேரம் இருக்காது.
அனைத்து பிணங்களையும் வண்டியில் கொண்டு போய் மொத்தமாக வைத்து எரிப்போம். சில சமயம் எரிக்க மரம் இருக்காது.
பெரிய கிடங்கு வெட்டி 30 பேரை மொத்தமாக புதைத்து விட்டோம் என்று கூறினார். இதை கேட்ட பின்பு ஆர்யா இது போன்று எல்லாம் திரைப்படங்களில் மட்டுமே பார்த்திருப்போம், ஆனால் இவர் இதை நேரடியாக பார்த்து வாழ்ந்துள்ளனர் என வருத்தப்பட்டுள்ளார் ஆர்யா.