இலங்கையில் ஒரே இடத்தில் திருமணம் செய்து கொண்ட 50 சீன ஜோடிகள்: என்ன காரணம்?

Report Print Santhan in இலங்கை
278Shares
278Shares
ibctamil.com

இலங்கையில் 50 சீன ஜோடிகள் ஒரே இடத்தில் கூடி திருமணம் செய்து கொண்டனர்.

இலங்கைக்கு ஆண்டு தோறும் வரும் சுற்றுலாப் பயணிகளில் சீனாவைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.

இதனால் இதை கொண்டாடும் விதமாக கொழும்பு நகரசபை மைதானத்தில் 50 சீன ஜோடிகளுக்கு திருமணம் செய்து வைக்கப்பட்டது.

இது இலங்கையின் கலாச்சாரம் தொடர்பில் மீண்டும் உறுதிப்படுத்தவும் நாட்டின் சுற்றுலாத்துறையை ஊக்குவிக்கும் நோக்கிலும் ராயல் வெடிங் 2017 என்ற இந்த திட்டத்தின் கீழ் திருமணம் நடைபெற்றுள்ளது.

இந்த திருமண விழாவின் போது, சீன ஜோடிகள் ஒருவரை ஒருவர் மோதிரம் மாற்றிக் கொண்டனர். புத்த முறைப்படி நடந்த இந்த திருமணத்தில் கண்கவர் கலை நிகழ்ச்சிகள் மற்றும் பள்ளி மாணவர்கள் நடனம் ஆடி அசத்தினர்.

இதையடுத்து இந்த விழாவில் கலந்து கொண்ட இலங்கை அமைச்சர்கள் திருமணம் செய்து கொண்ட தம்பதியினருக்கு, திருமணம் செய்து கொண்டதற்கு ஆதரமாக திருமணச் சான்றிதழ்களை அவர்களிடம் வழங்கினர்.

மேலும் இலங்கை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்