இலங்கையில் சாதனைக்காக செய்யப்பட்ட திருமணம் சர்ச்சையில் முடிவு

Report Print Vethu Vethu in இலங்கை
602Shares
602Shares
lankasrimarket.com

கண்டியில் இன்று நடைபெற்ற திருமணம் ஒன்றில் மணப்பெண் உலக சாதனை படைத்துள்ளார்.

மணமகள் 3,200 மீற்றர் நீளமான ஒசரி புடவையை அணிந்து சாதனையை பதிவு செய்துள்ளார்.

குறித்த புடவை கண்டி கெடம்பே சந்தியில் இருந்து ஈரியகம சந்தி வரை நீளமுடையது என கணக்கிடப்பட்டுள்ளது.

பாரவூர்தியொன்றில் கொண்டு வரப்பட்ட ஒசரி புடவை, வீதியில் சுமார் 250 மாணவர்களால் தாங்கி பிடிக்கப்பட்டிருந்தது.

இந்த நிகழ்வின் போது மத்திய மாகாண முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்கவும் கலந்து கொண்டார்.

இதற்கு முன்னர் இந்திய பெண்ணொருவர் நீளமான புடவையை அணிந்து சாதனை படைத்தார். அதன் நீளம் 2,800 மீற்றராகும்.

கண்டி, கன்னோருவ பிரதேசத்தில் நேற்று கின்னஸ் சாதனைக்காக ஏற்பாடு செய்யப்பட்ட திருமண நிகழ்வு சர்ச்சையில் முடிந்துள்ளது.

இது தொடர்பில் பேஸ்புக் உட்பட சமூக வலைத்தளங்களில் சர்ச்சை நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கண்டி - கொழும்பு வீதியில் பாடசாலை மாணவர்கள் பாடசாலை சீருடையில், மணமகளின் ஒசரி புடவையை பிடித்து கொண்டு வெயிலில் நின்றமையே இந்த சர்ச்சைக்கு காரணமாகியுள்ளது..

அந்த சந்தர்ப்பத்தில் மத்திய மாகாண முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்க கலந்து கொண்டிருந்தார். அவர் தனது பெயரில் ஆரம்பித்த அலவத்துகொட ஆரம்ப பாடசாலையின் மாணவர்களுடனே இந்த திருமண நிகழ்வில் கலந்து கொண்டார்.

இந்த திருமணத்தின் காரணமாக வீதியில் கடுமையான வாகன நெரிசல் ஏற்பட்டுள்ள நிலையில் அதனை கட்டுப்படுவதற்காக பேராதனை பொலிஸ் அதிகாரிகள் கடமையில் ஈடுபட்டிருந்தனர்.

மணமகள் 3,200 மீற்றர் நீளமான ஒசரி புடவையை இதற்காக அணிந்துள்ள நிலையில் அது இன்னமும் உத்தியோகபூர்வமாக கின்னஸ் சாதனையாக அறிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இலங்கை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்