தடைகளை மீறி திரண்ட தமிழ் மாணவர்கள்!! யாழ் பல்கலைக்கழகத்தில் கறுப்பு ஜுலை நினைவேந்தல்!!

Report Print Gokulan Gokulan in இலங்கை

கறுப்பு ஜுலை தமிழ் இன அழிப்பை நினைவுகூறும் முகமாக யாழ் பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் தற்பொழுது நினைவேந்தல் நிகழ்வு ஒன்றை நடாத்தி வருகின்றார்கள்.

இந்த நிகழ்வுக்கான தடைகள், நெருக்கடிகள் போன்றவற்றைக் கடந்து, திடீரென்று தன்னிச்சையாக மாணவர்கள் திரண்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் பல்கலைக்கழக வளாகத்திலுள்ள நினைவுத் தூபியில் இன்று இந்நிகழ்வு இடம்பெற்றுள்ளது.

பல்கலைக்கழக விரிவுரையாளர் இளம்பிறை பொதுச்சுடரை ஏற்றி வைத்தார். அதனைத்தொடர்ந்து நிகழ்வில் கலந்து கொண்டிருந்தவர்களும் சடரேற்றி வணக்கம் செலுத்திநினைவு கூர்ந்திருந்தனர்.

மேலும் இலங்கை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்