சிறப்பாக இடம்பெற்ற சுவிஸ் அருள்மிகு ஸ்ரீ சிவசுப்பிரமணிய சுவாமி தேர்த் திருவிழா

Report Print Thayalan Thayalan in இலங்கை

சுவிஸ் அருள்மிகு ஸ்ரீ கதிர்வேலாயுத சுவாமி ஆலயத்தின் தேர்த்திருவிழா நேற்றைய தினம் சிறப்பாக இடம்பெற்றுள்ளது.

ஆலயத்தின் மஹோற்சவ திருவிழா தொடர்ச்சியாக இடம்பெற்று வந்த நிலையில் பல விசேட பூஜைகள் மற்றும் யாகங்கள் நடத்தப்பட்டிருந்தன.

இந்த பூஜைகளிலும், யாகங்களிலும் பெருந்திரளான மக்கள் கலந்து கொண்டிருந்ததுடன், நேற்றைய தினம் இடம்பெற்ற தேர்த்திருவிழாவில் தமிழ் மக்கள் பலரும் கலந்து கொண்டு முருகப்பெருமானின் அருளைப் பெற்றிருந்தனர்.

தேர்த்திருவிழாவின் போது ஆண்களுடன் இணைந்து பெண்களும் தேரின் வடம் பிடித்ததுடன் மேலும் சில பெண்கள் தீச்சட்டி மற்றும் பால்குடம் ஏந்தி தமது நேர்த்திக்கடன்களை நிறைவேற்றிக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.

மேலும் புகைப்படங்களை பார்ப்பதற்கு இங்கே அழுத்தவும்...

மேலும் இலங்கை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers