கோத்தபாயவுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கத் தடை

Report Print Thayalan Thayalan in இலங்கை
கோத்தபாயவுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கத் தடை
70Shares
70Shares
ibctamil.com

முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் கோத்தபாய ராஜபக்ச மீது நிதி மோசடி ஆய்வு பொலிஸார் எவ்வித நடவடிக்கையையும் எடுப்பதைத் தடுக்கும் வகையில் தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தன்மீது சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளக்கூடாது என கோத்தபாய ராஜபக்ச மேல் முறையீட்டு நீதிமன்றில் விண்ணப்பித்திருந்தார்.

அந்த மனு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போதே அவர் மீது நடவடிக்கை எடுக்கத் தடையுத்தரவு விதிக்கப்பட்டது.

டி.ஏ.ராஜபக்ச அருங்காட்சியகத்தை நிறுவுவதற்கான செலவில் பெரும் பணத்தை முறைகேடாகப் பயன்படுத்திய சந்தேகத்தின் பேரிலேயே நிதி மோசடி விசாரணைப் பிரிவினர் அவரைக் கைது செய்யலாம் என எதிர்பார்க்கப்பட்டிருந்தது.

மேலும் இலங்கை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்