யாழில் ஜனாதிபதியின் நிகழ்வில் திடீர் குழப்பம்! மாணவர்கள் தடுமாற்றம்

Report Print Dias Dias in இலங்கை
3683Shares
3683Shares
ibctamil.com

யாழ் இந்துக்கல்லூரி மைதானத்தில் இடம்பெறவிருந்த இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் நிகழ்வு உடனடியாக இடமாற்றப்பட்டுள்ளதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார்.

குறித்த நிகழ்வு இந்துக் கல்லூரி மைதானத்தில் இடம்பெற ஏற்பாடாகியிருந்த நிலையில் தற்பொழுது பாடசாலையின் மண்டப கேட்போர் கூடத்திற்கு மாற்றப்பட்டுள்ளது.

தேசிய தமிழ் மொழித்தின விழவிற்காகவும் பாடசாலைகளின் கலாசார நிகழ்வுகளுக்காகவும் ஸ்ரீலங்காவின் சனாதிபதி யாழ்ப்பாண விஜயத்தினை மேற்கொண்டிருந்த நிலையில், இன்றைய தினம் யாழ் இந்துக் கல்லூரியின் திறந்த மைதானத்தில் நடைபெறவிருந்த நிகழ்வே தற்பொழுது இடமாற்றப்பட்டுள்ளது.

இதனால் நிகழ்வுக்கு வந்த மாணவர்கள் மிகப்பெரும் குழப்பத்துக்கு ஆளாகியுள்ளனர். மேலும் மண்டப கேட்போர் கூடத்தில் நடைபெறும் நிகழ்விலிருந்து மாணவர்கள் மற்றும் கல்வி உயர் அதிகாரிகள் அனைவரும் வெளியேற்றப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார்.

வரவேற்பு நடனத்திற்காக தயாரான மாணவிகளும் மைதான அரங்கில் காத்திருக்க தேசிய கீதத்துடன் நிகழ்வுகள் மண்டபத்தினுள் ஆரம்பமாகியுள்ளது.

மேலும் இலங்கை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்