சனி பகவானின் கெடுபலனிலிருந்து விடுபட வேண்டுமா? இதோ சில பரிகாரங்கள்

Report Print Kavitha in ஆன்மீகம்
232Shares

சனி பகவானின் கெடுபலனிலிருந்து விடுபட உதவும் சில பரிகாரங்கள் எப்படி செய்யலாம் என்பதை பற்றி இங்கு பார்ப்போம்.

  • சங்கடங்கள் தீர்க்கும் சனிபகவானை சனிக்கிழமைகளில் விசேஷமாக புரட்டாசி மாதம் வரும் சனிக்கிழமைகளில் விரதமிருந்து எள்ளு எரித்து சனிபகவானின் கெடுபலனிலிருந்து விடுபடுவதால் நற்பலனை பெறலாம்.

  • சனீஸ்வரரின் அருளை வேண்டி வழிபடுபவர்கள் அவசியம் ஸ்ரீகிருஷ்ண பரமாத்மாவையும் வேண்டுதல் செய்வது நல்லது. சனிபகவான் தொல்லை நீங்க வேண்டுமானால் விபூதி அணிய வேண்டும்.

சனீஸ்வர தீபம்

  • முக்கூட்டு எண்ணெய் (நல்லெண்ணை, நெய், இலுப்பை எண்ணெய்)யினால் ஓர் இரும்புச் சட்டியில் வெள்ளை, கறுப்பு, சிவப்பு வண்ண நூல்களைத் திரியாக இட்டு மேற்கு திக்கில் தீபம் ஏற்றி வர வேண்டும்.
  • இந்தத் தீபத்தைச் சனி பகவான் சன்னதியிலும் ஏற்றலாம். இந்த தீபத்தை ஏற்றி நீலோற்பல மலர் - நீலசங்கு புஷ்பம், வன்னி, இலை, வில்வ இலைகளால் தீபத்தைப் பூஜித்து சனி பகவானைச் சாந்தி பரிகாரம் செய்யலாம்.

  • இந்த தீப பரிகாரம் தாங்க முடியாத சனி பகவானின் இன்னலிருந்து விடுவித்து சாந்தியையும் மகிழ்ச்சியையும் அளிக்கும்.

மேலும் ஆன்மீகம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்