கால சர்ப்ப தோஷம் ஒருவருக்கு ஏற்பட்டால் என்ன நடக்கும்ன்னு தெரியுமா?

Report Print Nalini in ஆன்மீகம்

கால சர்ப்ப தோஷம் அல்லது சர்ப்ப தோஷம் என ஜோதிடத்தில் பொதுவாக அழைக்கப்படுகிறது.

பாம்பை ஒருவர் அல்லது சிலர் அடித்துக் கொல்லும் போது அது உயிர் விடும் தறுவாயில் கொல்பவரைப் பார்த்து விடும். அந்த தோஷம் தான் சர்ப்ப தோஷம் என கூறப்படுகிறது.

பிற தோஷங்களைப் போல முற்பிறவியில் செய்ததால் மட்டும் ஏற்படுவதில்லை. அந்த பிறப்பிலேயே கூட ஏற்படலாம்.

இப்படி கால சர்ப்ப தோஷம் உள்ளவர்களுக்குத் திருமணம் நடப்பதில் தாமதம் ஏற்படும். அப்படி நடந்தாலும் அவர்களுக்கு பிறக்கும் குழந்தைக்கு உடல் நல குறைவுடன் பிறக்கும். அப்படி குழந்தை நலமுடன் இருந்தாலும், அடிக்கடி நோய் தாக்கும்.

இனப்பெருக்கம் செய்ய இரு பாம்புகள் கூடி பின்னிப் பிணைந்து காதல்வயப்பட்டிருக்கும் போது அவற்றில் ஒன்றை அல்லது இரண்டையும் கொடூரமாகக் கொன்றால் கால சர்ப்ப தோஷம் ஏற்படும்.

மனிதர்கள் அந்த பாம்பை அடித்து கொல்ல முயலும் போது, நாங்கள் உங்களுக்கு எந்த தொந்தரவும் செய்ய மாட்டோம் என்பதைப் போல் பாம்பு அதன் வாலால் தரையில் அடித்து உறுதி செய்யும். அப்படி செய்த பின்னரும் மனிதர்கள் அதை கொன்றால். அது கொல்பவர்களை பழித்து விட்டு சாகும்.

இந்த தோஷம் இது பாம்பை கொல்வதால் மட்டுமல்லாமல். மற்ற விலங்குகளை கொன்றாலும் ஏற்படும். மற்ற விலங்குகள் இனப்பெருக்கம் செய்ய கூடி இருக்கும் போது அதை கல்லால் அல்லது கம்பால் அடிப்பதாலும் சாபம் ஏற்படும்.

இந்த சாபம் பெற்றவர்கள் அடுத்த பிறவியில் மனிதராக பிறந்து அவர்களின் ஜாதகத்தில் லக்கினத்தில் ராகு அல்லது கேது தனித்திருக்க பிறக்கின்றனர்.

இந்த பாம்பு கிரகங்களான ராகு - கேது இடையே ஏனைய கிரகங்கள் சிக்கிக் கொள்ளும். இப்படி ராகு கேது இடையே மற்ற கிரகங்கள் அடைப்பட்டு கிடப்பதற்கு கால சர்ப்ப தோஷம் எனப்படுகிறது.

இதன் விளைவுகள்

 • கால சர்ப்ப தோஷத்தினால் பாதிக்கப்பட்டவரின் ஜாதகத்தில் ராகு கேதுவுக்கு இடையே ஏனைய கிரகங்கள் அமைந்து, அவைகள் கொடுக்கும் நன்மைகளில் நஞ்சு ஏற்பட்டு தீமையாகும்.
 • இவர்களுக்குத் திருமண தடை ஏற்பட்டு வயது 35 வரை வாழ்க்கை வீணாகும்.
 • 5ம் இடத்தில் ராகு இருப்பின் அவர்களுக்கு பெண் குழந்தையே பிறக்காது. ஆண் குழந்தை தான் பிறக்கும். அதுவும் நோய் தாக்குதலால் அவதிப்படும்.
 • 5ல் கேது இருப்பின் அவர்களுக்கு ஆண், பெண் குழந்தைகள் பிறக்கும். இருப்பினும் அவர்கள் நோஞ்சானாக இருப்பார்கள். அந்த குழந்தைகள் பெற்றோரை வெறுக்கும் மன நிலையில் இருப்பார்கள்.

கால சர்ப்ப தோஷத்தின் 12 வகைகள்

அனந்த கால சர்ப்ப தோஷம்

 • ராகு முதல் வீட்டிலும் (லக்கினத்தில்), கேது 7ம் இடத்திலும் இருப்பதால் அனந்த கால சர்ப்ப தோஷம் ஏற்படும். இதற்கு விபரீத கால சர்ப்ப தோஷம் என்பார்கள்.
 • இந்த ஜாதக அமைப்பு உள்ளவர்களுக்கு வாழ்வில் பல இடையூறுகள், துன்பங்கள் ஏற்படும். இவர்களுக்கு திருமண தாமதம் ஏற்படும்.

சங்க சூட கால சர்ப்ப தோஷம்

 • ராகு 9ம் இடத்திலும், 3ல் கேதுவும் இருக்கும் இந்த ஜாதகத்தினர் பொய்கள் அதிகம் பேசுவார்கள். முன்கோபம் அதிகம் வரும். அதிக துன்பங்களை அனுபவிப்பார்கள்.
கடக சர்ப்ப தோஷம்
 • ராகு 10ம் வீட்டிலும், கேது 4ல் அமையப்பெற்ற இவர்களுக்கு சட்ட சிக்கல்கள் ஏற்படும். அதோடு அரசால் தண்டனைப் பெறுவார்கள்.
 • 10ல் ராகு இருக்கப்பெற்றவர்கள் இருட்டு தொடர்பான தொழில் அமையும். அதாவது புகைப்படம், எக்ஸ்ரே போன்ற வேலையை செய்வார்கள். இவர்கள் அரசுக்கு எதிராகவும், வாழ்வில் மன அமைதி இன்று வாழநேரிடும்.
குளிகை சர்ப்ப தோஷம்
 • ராகு 2ம் இடத்திலும் கேது 8லும் இருப்பவர்கள் உடல் நல பிரச்சினைகளால் வாழ்நாள் முழுவதும் பாதிக்கப்படுவார்கள். அதோடு விபத்து, இழப்புகள் ஏற்பட்டு மன அமைதியை இழப்பார்கள்.
வாசுகி சர்ப்ப தோஷம்
 • ராகு 3லும், கேது 9ம் இடத்திலும் அமையப்பெற்றிருப்பின் வாசுகி சர்ப்ப தோஷம் ஏற்படும். இதனால் தொழில், உத்தியோகத்தில் பிரச்னைகள் ஏற்படும். இளம் வயதிலேயே அதிக துன்பங்களும், தொல்லைகளும் அவர்கள் சந்திக்க வேண்டி வரும்.
சங்கல்ப சர்ப்ப தோஷம்
 • ராகு 4ம் இடத்திலும், கேது 10ம் இடத்தில் அமையப்பெற்றிருந்தால் அவர்களுக்கு வேலை வாய்ப்பு அமைவதில் சிக்கல் ஏற்படும்.
 • வேலை கிடைத்தாலும் அதில் சாதிக்க முடியாத நிலை உருவாகும். தொழில் தொடங்கினால் அதில் பெரிய லாபமோ, முன்னேற்றமோ இருக்கவே இருக்காது.
பத்ம சர்ப்ப தோஷம்
 • ராகு 5ம் இடத்திலும், கேது 11ம் இடத்தில் அமைந்திருந்தால் குழந்தை செல்வம் உண்டாகாது. அல்லது கால தாமதம் ஏற்படும்.
 • பேய், பிசாசுகளின் தொல்லை ஏற்படும். நண்பர்களால் ஏமாற்றமும், வாழ்நாள் முழுவதும் நோய்யால் பாதிப்பு ஏற்படும்.
மகா பத்ம சர்ப்ப தோஷம்
 • ராகு 6லும் கேது 12ல் இருக்கப் பெற்றால் மகா பத்ம சர்ப்ப தோஷம் ஏற்படலாம். இதனால் வாழ்நாள் முழுவதும் அமைதியின்றி இருக்க நேரிடும். பல இடையூறுகள் ஏற்படும்.
தக்ஷக சர்ப்ப தோஷம்
 • கேது லக்கினத்திலும், ராகு 7ம் இடத்தில் அமையப்பெற்றவர்கள் அவசர கதியில் செயல்களை செய்வார்கள். முன் யோசனை செய்யவே மாட்டார்கள். வரும் செல்வம் முழுவதும் மது, மாதுக்காக அதிகம் செலவு செய்து பணத்தை வீணடிப்பார்கள்.
 • இவர்களுக்கு திருமணமானாலும் பல பிரச்னைகள் வரும். திருமண வாழ்க்கையில் மன அமைதியின்றி அலைவார்கள்.
கார் கோடக சர்ப்ப தோஷம்
 • ராகு 8ம் இடத்திலும், கேது 2ம் இடத்திலும் அமைந்தால் கார் கோடக சர்ப்ப தோஷம் ஏற்படக்கூடும். தந்தை வழி சொத்துக்கள் இருந்தாலும் அவர்களுக்கு கிடைக்காது. நண்பர்கள் பகையாளராக மாறுவார்கள்.
விஷ் தார சர்ப்ப தோஷம்
 • ராகு 11ம் இடத்தில் அமைந்து கேது 5ல் அமைந்தால் விஷ் தார சர்ப்ப தோஷம் ஏற்படும். இதனால் திருமணம் நடந்தாலும் அவர்கள் குடும்பத்துடன் வாழாலும், அடிக்கடி வெளியூர், வெளிநாடு பயணம் செய்வார்கள். குழந்தைகள் பிறந்தாலும் அவர்களுக்கு அடிக்கடி உடல் நலம் குன்றும்.
 • இவர்கள் 50 வயதைக் கடந்த பின்தான் நிம்மதியாக வாழ முடியும்.
சேஷ நாக சர்ப்ப தோஷம்
 • ராகு 12ல் அமர்ந்து, கேது 6ம் இடத்தில் இருப்பின் சேஷ நாக சர்ப்ப தோஷம் உண்டாகும். இவர்கள் கொடிய நோய்க்கு ஆளாவார்கள். எதிரிகளால் தொல்லையும், வம்பு வழக்கை சந்திக்க நேரிடும்.
கலா சர்ப தோஷ பரிகாரங்கள்
 • கலா சர்ப தோஷம் பல கஷ்டங்கள் ஏற்படக்கூடும். அதன் விளைவுகளைத் தணிக்க வழிகள், பரிகாரம் உள்ளன
 • சிவலிங்கம் - கலா சர்ப தோஷத்திலிருந்து நிவாரணம் பெற சிவ லிங்க வழிபாடு செய்யலாம்.
 • ஒரு கோவில் அல்லது ஒரு மத நிறுவனத்திற்குப் பால் தானம் செய்யலாம்.
 • ஒவ்வொரு நாளும் சுமார் அரை மணி நேரம் இறைவனை வணங்க வேண்டும்.
 • ராகுவின் ஆளும் தெய்வங்களான சிவன் மற்றும் பார்வதியை வணங்கினால் தோஷம் விலகும்.
 • வீட்டில் கல் அல்லது உலோகத்தால் ஆன ஒரு சிறிய சிவ லிங்க சிலையை வாங்கி வந்தால் ஒரு சிவலிங்கத்தின் முன் “ஓம் நமசிவாய” என்று 108 முறை ஜெபிக்க வேண்டும்.
 • 12 ஜோதிர்லிங்க க்ஷேத்திரங்களில் ஏதேனும் ஒன்றிற்குச் சென்று இறைவனை மனதார வழிபாடு செய்ய வேண்டும்.
 • ஒவ்வொரு நாளும் 108 காயத்ரி மந்திரத்தை உச்சரிக்க வேண்டும்.

மேலும் ஆன்மீகம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்