ஆன்மீகப்படி எந்த தெய்வத்துக்கு எத்தனை தீபம் ஏற்றவேண்டும் ?

Report Print Kavitha in ஆன்மீகம்

நமது அன்றாட வாழ்வில் மிக முக்கியமான இடத்தைப் பிடித்துள்ளது விளக்கு ஏற்றி இறைவனை வழிபாடுதல்.

இதனால் நமது வீட்டுக்கு தெய்வீகப் பேரொளியும் லட்சுமி கடாட்சமும் ஒரு சேர வருவதாக ஐதீகம் எனப்படுகின்றது.

காலையில் எழுந்ததும் விளக்கேற்றி தெய்வத்தை வழிபட்டு, அதன் பிறகு அன்றைய வேலைகளைச் செய்யத் தொடங்கும்போது மனதில் உற்சாகமும் செயலில் ஒரு உத்வேகமும் பிறக்கும் என்று முன்னோர்கள் கூறியுள்ளனர்.

அதுமட்டுமின்றி நமது முன்னோர்கள் எந்த தெய்வதற்கு எப்படி விளக்கு ஏற்ற வேண்டும் என்ற விதி விதித்துள்ளனர்.

அந்தவகையில் தற்போது எந்த தெய்வத்துக்கு எத்தனை தீபம் ஏற்றவேண்டும் என்பதை பற்றி இங்கு பார்ப்போம்.

 • ராகுதோஷம் - 21 தீபங்கள்
 • சனிதோஷம் - 9 தீபங்கள்
 • குரு தோஷம் - 33 தீபங்கள்
 • துர்க்கைக்கு - 9 தீபங்கள்
 • ஈஸ்வரனுக்கு - 11 தீபங்கள்
 • பெருமாளுக்கு - 15 தீபங்கள்
 • சக்திக்கு - 9 தீபங்கள்
 • மகாலட்சுமிக்கு - 5 தீபங்கள்
 • முருகனுக்கு - 9 தீபங்கள்
 • வினாயகருக்கு - 5 தீபங்கள்
 • ஆஞ்சினேயருக்கு - 5 தீபங்கள்
 • காலபைரவருக்கு - 1 தீபம்
 • திருமண தோஷம் - 21 தீபங்கள்
 • புத்திர தோஷம் - 51 தீபங்கள்
 • சர்ப்பதோஷம் - 48 தீபங்கள்
 • காலசர்ப்பதோஷம் - 21 தீபங்கள்
 • களத்திர தோஷம் - 108 தீபங்கள்

மேலும் ஆன்மீகம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்