பல்வேறு பிரச்னைகளை எளிதில் தீர்க்க வேண்டுமா? இதோ பரிகாரங்கள்

Report Print Kavitha in ஆன்மீகம்

பரிகாரம் என்றால் நமக்குள்ள பிரச்னைகள், கஷ்ட நஷ்டங்கள், தடைகள், இடையூறுகளை அகற்றி நல்வழிகாட்டுமாறு கடவுளிடம் பிரார்த்தனை, நேர்த்திக்கடன் இப்படி பல விஷயங்களை வேண்டிக்கொள்வதாகும்.

அந்தவகையில் நமக்கு வருகின்ற பல்வேறு பிரச்னைகளை தீர்க கீழ் குறிப்பிடப்பட்டுள்ள பரிகாரங்கள் சிலவற்றை பின்பற்றினாலே போதும். தற்போது அந்த பரிகாரங்கள் என்னென்ன என்பதை பார்ப்போம்.

  • வீட்டில் ஸ்படிக லிங்க வழிபாடு, ஸ்ரீ யந்திர வழிபாடு ஒருவரை விரைவில் செல்வ நிலையை அடைய உதவும். தினமும் ஸ்ரீ சூக்தம் படித்தோ அல்லது கேட்டோ வருவது அதிக பலன் தரும்.
  • செம்பு மற்றும் வெள்ளி அதிகம் உடலில் படும் படி செய்து வரவும். இரண்டும் மிகுந்த சக்தி வாய்ந்தவை. செம்பு மோதிரம் அல்லது கை வளையம் மற்றும் இடது கை ஆட்காட்டி விரலில் வெள்ளி மோதிரம் (கற்கள் எதுவும் இல்லாத சாதாரணமான ஒன்று) அணிவது தான் அகர்ஷ்னா முறைகளில் ஒன்று. வலது கை சுண்டு விரலில் செம்பு மோதிரம் அணியவும்.
  • சுத்தமான மலை தேன் மற்றும் குங்குமம் எப்போதும் சுவாமி அறையில் இருக்குமாறு பார்த்து கொள்ளவும்.
  • வியாபாரிகள் சுத்த தேன் நிறைந்த பாட்டில் தங்கள் மேஜையில் மற்றும் பணம் வைக்கும் இடத்தில் வைத்து வரலாம்.
  • வட கிழக்கு மூளையில் துளசி செடி வைத்து தினமும் அதை சுத்தமாக பராமரித்து வரலாம். மேலும் வியாழன் அன்று மட்டும் அதற்கு சுத்தமான பாலை வார்த்து வரவும்.
  • மேற்கு பார்த்த வீடு கடை உள்ளவர்கள் வாயிலில் மஞ்சள் துணி கட்டி வைக்கலாம். மற்ற திசை உள்ளோர்கள் சிகப்பு துணி அல்லது ரிப்‌பன் கட்டலாம்.
  • குளிக்கையில் தினசரி வில்வ இலையை போட்டு குளித்து வரலாம். வில்வ இலையை கொதிக்க வைத்து குளிக்கும் நீரில் கலந்து குளிக்க நலம் மிகும்.
  • ஏழை எளியோர், தானம் கேட்போர் (பிச்சை) ஆகியோருக்கு மஞ்சள் லட்டு மற்றும் மஞ்சள் வாழை வாங்கி கொடுக்கவும்.
  • தினசரி முடிந்தாலும் செய்யலாம். காளை மாட்டிற்கு வெல்லம் கொடுத்து வரலாம்.

மேலும் ஆன்மீகம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers