கடன் பிரச்னை தீர வேண்டுமா? இதோ எளிய பரிகாரங்கள்

Report Print Kavitha in ஆன்மீகம்
388Shares

இன்று நம்மில் பலருக்கு உள்ள முக்கிய பிரச்னைகளில் பணப்பிரச்னையும் ஒன்றாகும்.

அதிலும் பணப்பிரச்னை வந்தால் அதனை சமளிக்க முடியமால் பலரும் கடன் வாங்கி அதனை செலுத்த முடியாமல் அவதிப்படுவதுண்டு.

கடன் பிரச்னைகள் நீங்கி வாழ்வில் சுகம் பெற சில பரிகாரங்களை செய்தாலே போதும் வாழ்வில் நிம்மதியாக இருக்கலாம்.

தற்போது அந்த பரிகாரங்கள் என்னென்ன என்பதை பார்ப்போம்.

  • வெள்ளத்தால் பாயாசம் செய்து தொடர்ந்து ஐந்து நாட்களுக்கு உங்கள் கைகளால் பசுவிற்கு வழங்கி வரவேண்டும். இதில் முக்கியமாக கடனை வாங்கியவர் கைகளால் பசுவிற்கு பாயாசம் தரவேண்டும். வீட்டில் உள்ளவர்கள் கூட பாயாசம் செய்துதரலாம்.
  • பசியால் வாடும் ஒருவருக்கு, தொடர்ந்து ஐந்து நாட்கள் சாப்பாடு கொடுக்கவேண்டும்.
  • வியாழக்கிழமை குங்குமம் வாங்கி அதனை, வெள்ளிக்கிழமை அம்பாள் அல்லது தாயார் சன்னதியில் சென்று தரவேண்டும். இந்த பரிகாரத்தை நீங்கள் 11 வாரங்கள் தொடர்ந்து செய்யவேண்டும்.இதில் எந்த தடையும் வராமல் பார்த்து கொள்ளவேண்டும்.
  • கோதுமையில் ஆறு துளசி இலை மற்றும் சிறிதளவு குங்குமப்பூவை சேர்த்து அரைத்துக்கொண்டு அதை உங்கள் வீட்டில் வைத்து வழிப்பட்டால் கடன் தீருவதை நீங்கள் உணரலாம்.
  • வெள்ளிக்கிழமை அன்று, மஹாலக்சுமி சன்னதிக்கு சென்று மலர்களை கொண்டு பூஜை செய்யவேண்டும்.

மேலும் ஆன்மீகம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்