ஆடி மாதம் மட்டும் ஏன் இவ்வளவு சிறப்பு?

Report Print Kavitha in ஆன்மீகம்

தமிழ் மாதங்களில் ஆடி மாதம் மட்டும் சிறப்பான மாதமாக கருதப்படுகின்றது. ஏனெனில் இம் மாதம் அம்மனுக்குரிய மாதமாகப் போற்றப்படுகிறது.

அதுமட்டுமின்றி ஆடி மாதத்தில் அம்மனுக்கு ஆடிக்கூழ் செய்வது வழக்கமாகும்.

தட்சிணாயன புண்ணிய காலம் ஆடி மாதத்தில் தான் தொடங்குகிறது.

இப்புண்ணிய காலத்தின் போது சூட்சும சக்திகள் வானத்திலிருந்து வெளிப்படும். அந்த சமயத்தில் பூஜைகள் வேத பாராயணங்கள், ஜபங்கள், நீத்தார் வழிபாடுகள் செய்தால் பலன் அதிகமாக கிடைக்கும்.

சூரியன் கடக ராசியில் சஞ்சரிக்கும் கால அளவான 31 நாட்கள், 28 நாழிகை, 12 விநாடி கால அளவை கொண்டது ஆடி மாதம். எனவே இதை கற்கடக மாதம் என்றும் சொல்வதுண்டு.

ஒரு கல்ப காலத்தில் ஆடி மாதம் ஒன்றில் தான் பார்வதி தேவி. மலைரசன் மகளாக பிறந்தால் என்கிறது தேவி பாகவதம் கூறுகினறது.

ஆடிச் செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் சில அம்மன் கோயில்களில் அம்மனுக்கு வளைகாப்பு வைபவம் நடைபெறும்.

மேலும் பக்தர்கள் வழங்கும் ஆயிரக்கணக்கான கண்ணாடி வளையல்களை சரம்சரமாகக் கோர்த்து அம்மனுக்கு அலங்காரம் செய்வர்.

மூன்று நாட்கள் கழித்து அந்தக் கண்ணாடி வளையல்களை சுமங்கலிகளுக்குப் பிரசாதமாக வழங்குவர். இதனால் சுமங்கலிகள் குடும்பத்தில் நீடூழி சுகமாக வாழ்வர்.

வளையல்களைப் பிரசாதமாகப் பெறும் கன்னிப் பெண்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும் மக்கட்செல்வம் இல்லாதவர்களுக்கு நல்ல அழகான குழந்தை செல்வம் கிட்டும்.

ஆடி மாதத்தில் பூர நட்சத்திரம் இணையும் நாள் மிகவும் சக்தி கொண்டது. எனவே இந்நாளில் வளைகாப்பு நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.

ஆடிப்பூர நன்னாளில்தான் ஸ்ரீ ஆண்டாள் ஸ்ரீவில்லிப்புத்தூரில் துளசி வனத்தில் அவதரித்தாள்.

பூமாதேவி அவதரித்த ஆனந்தமான மாதம் ஆடி ஆடிச் செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் அம்மன் சந்நிதிமுன் நெய் விளக்கேற்றி வழிபட்டாலும் எலுமிச்சை விளக்கேற்றி வழிபட்டாலும் தோஷங்கள் விலகும் சந்தோஷமான வாழ்வுகிட்டும்.

மேலும் ஆன்மீகம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers