அம்மன் கோயில்களில் ஆடி மாதம் கூழ் ஊற்றுவது ஏன் தெரியுமா?

Report Print Kavitha in ஆன்மீகம்

ஆடி மாதம் என்றாலே அம்மன் கோயில்களில் திருவிழாவும், கூழ் ஊற்றுவதும் காலங்காலமாக கடைபிடிக்கப்பட்டு வந்த வழக்கம் ஆகும்.

ஆடி மாதத்தில் பருவ விதைப்புக்கான முதல் மழை முன்பு கட்டாயம் பெய்யும் என்று நம்பப்படுகின்றது. அதனைக் கொண்டாடவே ஆடி முதல் நாள் கூழ் காய்ச்சிக் கொண்டாடுவர்

அம்மன் கோவில்களில் ஆடிமாதப் பிறப்பில் பெரிய பெரிய கிடாரங்களில் சித்திரை மாதங்களில் சித்திரைக் கஞ்சி காய்ச்சி ஊற்றுவது போல ஆடிப் பிறப்பன்று இந்த ஆடிக் கூழ் காய்ச்சி கொடுப்பார்கள்.

உண்மையில் ஆடி மாதத்தில் ஆடிக்கூழ் குடிப்பதற்கு பல காரணங்கள் கூறப்படுகின்றது.

அதில் ஆடி மாதம் வீசக்கூடிய காற்றின் வேகம் அதிகமாக இருக்கும். அதனால் எங்கும் தூசியாக இருக்கும். இதனால், இருமல் போன்ற நோய்கள் வரலாம். இதைத் தவிர்க்கவே மாரியம்மன் கோயில்களில் ஆடி மாதம் முழுவதும் கூழ் ஊற்றுவார்கள் என சொல்லப்படுகின்றது.

இதை ஆடிக்கஞ்சி என்று அழைக்கப்படுகின்றது. இது அதிமதுரம், சீரகம், திப்பிலி, சின்ன வெங்காயம், திரிகடுகம், குன்னிவேர், உழிஞ்சி வேர், சீற்றாமுட்டி, கடலாடி வேர்-இவற்றை லேசாகத் தட்டி எடுத்து, ஒரு வெள்ளைத் துணியில் கட்டி வைத்துக்கொள்ள வேண்டும்.

அரிசியைக் கஞ்சியாக வேகவைத்து அதில் இந்தத் துணியில் உள்ள மருந்துகளைப் பிழிய வேண்டும்; அல்லது, கஞ்சிக்குள் அந்தத் துணிப் பொட்டலத்தைச் சிறிது நேரம் போட்டு ஊறவைத்து, எடுத்து அதன்பிறகே ஆடிக் கஞ்சியைப் பரிமாற வேண்டும்.

அதுமட்டுமல்ல இந்தக் கூழ் அந்த கோடைக்காலத்தின் சீதோஷ்ண நிலைக்கு மிகவும் அருமையானதாக பொருந்தவும் செய்கிறது.

மேலும் ஆன்மீகம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers