ஆன்மீகப்படி இந்த செயல்களை மட்டும் மறந்தும் கூட செய்துவிடாதீங்க.....

Report Print Kavitha in ஆன்மீகம்

ஆன்மீகப்படி சில செய்யக் கூடாத ஆன்மிக செயல்களை உள்ளன. தற்போது அவை என்னென்ன என்பதை பார்ப்போம்.

  • பெண்கள் இரவில் விளக்கு வைத்தவுடன் அழக் கூடாது. காலை ஆட்டக் கூடாது.

  • மல்லாந்து படுக்கக் கூடாது. விளக்கு வைத்த பின் வளையல்களைக் கழற்றக் கூடாது.

  • திருமணம் ஆன பெண்கள் கைகளில் வளையல் அணியாமல் உணவு பரிமாறக் கூடாது.

  • செவ்வாய், வெள்ளிக் கிழமைகளில் வீட்டை விட்டுச் சென்றால் இரவு வீடு திரும்பி விட வேண்டும். அன்று பிறர் வீடுகளில் தங்கக் கூடாது.

  • ஒற்றை ருத்திராட்சத்தைக் கழுத்துக் குழிக்கு மேல் கட்டவேண்டும், கீழே இறங்கக் கூடாது.

  • ருத்திராட்சம், துளசி மணிம் ஆபடிகம் போன்ற மாலைகளை ஜபம், பூஜை, ஜோமம் போன்ற காலங்களைத் தவிர மற்ற நேரங்களில் அணியக் கூடாது.

  • கோவிலுக்கு செல்லும்போதும் பூஜை செய்யும்போதும் பெண்கள் முடியைத் தொங்கவிடாமல் நுனி முடிச்சுப் போடவேண்டும்.

  • வீட்டில் சுவாமியிடம் ஏற்றிய தீபத்தை வாயினால ஊதி அணைக்கக் கூடாது. விரலால் பால் திட்டு வைத்தோ குங்குமம் வைத்தோ, பூவாலோ கை அமர்த்தலாம்.

  • துளசி, வில்வம் இவற்றை செவ்வாய், வெள்ளி, அமாவாசை, பெளர்ணமி, துவாதசி, சாயங்காலம், இரவு நேரம் பறிக்கக் கூடாது.

  • ஒரு காலினால் மற்றொரு காலினைத் தேய்த்து அலம்புதல் கூடாது. பூஜை செய்யும்போது பூத்தட்டை மடியில் வைத்து பூவெடுத்து பூஜை செய்யக் கூடாது.

  • கன்னிப் பெண்கள் சாந்துப் பொட்டையே வைத்துக் கொள்ள வேண்டும். திருமணம் ஆன பெண்கள்தான் குங்குமப் பொட்டு வைத்துக் கொள்ள வேண்டும்.

மேலும் ஆன்மீகம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers