நீங்கள் சிம்ம ராசியில் பிறந்தவரா? வாழ்வில் அதிர்ஷ்டங்கள், யோகங்கள் ஏற்பட இதோ எளிய பரிகாரம்

Report Print Kavitha in ஆன்மீகம்

12 ராசிகளில் ஐந்தாவது ராசியாக சிம்ம ராசியுள்ளது.

நவகிரகங்களில் சூரியனுக்குரிய ராசியாக சிம்ம ராசி இருக்கிறது.

இந்த ராசியில் பிறந்தவர்கள் வாழ்வில் அதிர்ஷ்டங்கள், யோகங்கள் ஏற்பட செய்ய வேண்டிய எளிய பரிகாரத்தினை பற்றி இங்கு பார்ப்போம்.

  • சிம்மராசி காரர்கள் தங்கள் வாழ்வில் மிகுந்த திட்டங்களை பெறுவதற்கு வருடத்தில் ஒரு முறையேனும் வீட்டில் மகா மிருத்யுஞ்ஜய ஹோமம் செய்வது சிறந்த பலன்களை தரும்.
  • உங்களால் முடிந்த போதெல்லாம் மஞ்சள் அல்லது ஆரஞ்சு நிற உடைகளை அணிந்து கொள்ளலாம்.
  • குறைந்தபட்சம் மஞ்சள் அல்லது ஆரஞ்சு நிற கைக்குட்டைகளை வைத்துக் கொள்வதால், அதிர்ஷ்டங்கள் உங்களை நோக்கி ஈர்க்கப்படும்.
  • முடிந்தவரை ஞாயிற்றுக்கிழமைகளில் புலால் உணவுகள் ஏதும் உண்ணாமல், கோவிலுக்கு சென்று சூரிய பகவானை வழிபட்டு வருவதால் சிறப்பான பலன்கள் உங்கள் வாழ்வில் ஏற்படுவதை நீங்கள் காணலாம்.
  • வருடந்தோறும் வருகின்ற தை, ஆடி, மகாளய அமாவாசை போன்ற தினங்களில் தவறாமல் மறைந்த முன்னோர்களுக்கு திதி தர்ப்பணம் கொடுத்து வரவேண்டும்.
  • பார்வை இழந்த நபர்களுக்கு உங்களால் இயன்ற தானங்களை செய்வது சூரியபகவானின் அருளாசிகளை உங்களுக்கு பெற்றுத்தந்து, வாழ்வில் மேன்மையான நிலையை அடைய உதவும் ஒரு சிறந்த பரிகாரமாக இருக்கிறது.

மேலும் ஆன்மீகம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்