ஐயப்ப பக்தர்கள் துளசி மாலை அணிவதன் ரகசியம் என்ன தெரியுமா?

Report Print Kavitha in ஆன்மீகம்

சபரிமலைக்கு சென்று ஐயப்பனை தரிசிக்க செல்லும் பக்தர்கள் ருத்ராட்ச மாலையும், துளசி மாலையும் அணிந்து விரதமிருந்து செல்வார்கள்.

சபரி மலைக்குச் செல்ல விரதமிருப்பதை மற்றவர்கள் தெரிந்துகொள்வதற்கான அடையாளம் இது என்றுதான் பலரும் நினைக்கிறார்கள், ஆனால் உண்மையில் இதன் காரணத்தை புராணங்கள் விளக்குன்றது.

ஹரிஹர சுதனுக்கு தாய் ஸ்தானத்தை வகிப்பவர், மோகினி அவதாரம் எடுத்த மகா விஷ்ணு. திருமாலின் மார்பில் நீங்காத வாசம் செய்பவள் மகாலட்சுமி. அந்தத் திருமகள் துளசியில் நிரந்தர வாசம் செய்வதாகச் சொல்கின்றனர்.

துளசிமாலை அணிவதால், மகாலட்சுமி கடாட்சம் சேரும். இது, மெய்ஞான தத்துவம். இன்னொரு வகையில் பார்த்தால், துளசி, வெப்பத்தை உண்டாக்கக் கூடியது.

கார்த்திகை மாதத்தில் தொடங்கி, தை மாதம் வரை குளிர்காலத்தில் தினமும் இருவேளை நீராடும் பக்தர்களுக்கு உடல் ரீதியான பாதிப்பு எதுவும் வந்துவிடாமல் தவிர்ப்பதற்காகவே, துளசிமாலை அணிவது நம் முன்னோர்களால் நியதியாக ஏற்படுத்தப்பட்டிருக்கிறது.

மஹாவிஷ்ணு பாற்கடலில் சயனித்திருக்க, அவர் கழுத்தையும் துளசி மாலை அலங்கரிக்கும். இதன் காரணமாக ஐயப்ப பக்தர்கள் ருத்ராட்சம் மற்றும் துளசி மாலையணிந்து சபரிமலை செல்கின்றனர் என்று சொல்லப்படுகின்றது.

மேலும் ஆன்மீகம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...