மகர ஜோதி வழிபாட்டின் முக்கியத்துவம் என்ன?

Report Print Kavitha in ஆன்மீகம்

சபரி மலை ஐயப்பன் சந்நிதியில் நடைபெறும் முக்கியத் திருவிழா மகர ஜோதி தரிசனம் என்று அழைக்கப்படுகின்றது.

மகர ஜோதி விழாவானது 40 நாட்கள் மண்டலா பூஜைக்குப் பிறகு தொடங்கும்.

ஜோதிட சாஸ்திரப்படி மகர ராசியில் சூரியதேவன் பிரவேசிக்கும் உத்திராயன காலத் துவக்கமே மகர ஜோதி வேளை எனப்படுகிறது.

மகர ஜோதி நாளன்று முக்கிய நிகழ்வான ஸ்ரீஐயப்பனுக்கு அணிவிக்கப்படும் திருவாபரணங்கள் பம்பையில் இருந்து சந்நிதானத்துக்கு கொண்டு வரப்படும்.

திருவாபரண அலங்காரத்தில் ஐயப்பனுக்கு சிறப்பு அர்ச்சனைகள் செய்து அதன்பிறகு மாலை 6.40 மணி தொடங்கி 6.50 வரை ஸ்ரீசபரிமலை சந்நிதானத்தின் வடகிழக்குப் பகுதியில் உள்ள ஐந்தாவது மலையான காந்தமலைப் பகுதியின் பொன்னம்பல மேட்டில் ஜோதி ரூபமாக, தெய்வீக ஒளியாக மூன்று முறை மகரஜோதி எழும்பி காட்சியளிக்கும்.

பக்தர்கள் சன்னிதானத்தைச் சுற்றியுள்ள சன்னிதானம், பாண்டித்தாவாளம், புல்மேடு, சரங்குத்தி, நீலிமலை, மரக்கூடம், மலைஉச்சி, சாலக்கயம் மற்றும் அட்டதோடு ஆகிய 9 இடங்களில் இருந்து மகரஜோதியைக் காணலாம்.

ஒவ்வொரு மாதமும் நடை சாத்தும்போது, ஹரிவராசனம் பாடிவிட்டு, கிலோ கணக்கில் பசுமையான திருநீற்றை ஐயப்பன்மேல் சாத்துவார்கள். அத்துடன், ஐயப்பனின் சின் முத்திரையின் மேல் ஒரு ருத்திராட்ச மாலையைப் போடுவார்கள். இதற்கு தவக்கோலம் என்று பெயர் அப்போது, ஒரு விளக்கையும் ஏற்றி வைப்பார்கள்.

அந்த விளக்கானது, மீண்டும் அடுத்த மாதம் நடை திறக்கப்படும் வரை எரிந்து கொண்டே இருக்கும் அதிசயம், தவறாமல் அரங்கேறுகிறது.

கோயில் கதவு திறந்து, உலகத்தின் பார்வை அந்தக் கோயிலுக்குள் நுழைந்ததும், ஐயப்பனின் தவக்கோலம் கலைந்துவிடுகிறது. அடுத்த நிமிடமே அந்த விளக்கும் அணைந்து விடுகிறது. சின்முத்திரையின் மேல் போடப்பட்ட ருத்திராட்ச மாலையும் கை மாறி இருக்கும்.

மேலும் ஆன்மீகம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers