நீங்க வரலட்சுமி விரதம் இருக்கீங்களா?அப்போ இத்தனை நன்மைகளும் உங்களுக்குதான்!

Report Print Jayapradha in ஆன்மீகம்

லட்சுமி பூஜை செய்யும் போது, நம் வீட்டுக்கு வரும் விருந்தினர்களை நாம் எப்படி உற்சாகமாக வரவேற்போமோ, அதே மாதிரி வாசலில் நின்று லட்சுமியை பாவனை செய்து அழைக்க வேண்டும்.

மகாலட்சுமி நித்திய சுமங்கலி என்றழைக்கப்படுகிறாள். எனவே தான் அவளை நினைத்து பெண்கள் வரலட்சுமி விரதம் மேற்கொள்கிறார்கள்.

வரலட்சுமி விரதத்தில் செய்ய வேண்டியவை.

 • முதலில் காலையில் உபவாசத்துடன் பூஜை அறையை கோலமிட்டு அலங்காரம் செய்ய வேண்டும். கலசத்தில் லட்சுமியை ஆவாகனம் செய்து நிவேதனங்கள் படைத்து வழிபட வேண்டும்.

 • மகாலட்சுமிக்கு உகந்தது நெய் விளக்காகும். சகலவித செல்வத்தையும் வீட்டில் நலனையும் தருவது நெய் விளக்கு வழிபாடுதான். எனவே இதை மறக்கக்கூடாது.

 • பூஜை செய்யும் போது மகாலட்சுமிக்குரிய புராயணப் பாடல்களை பாடித் தியானிக்கலாம்.

 • வீடுகளில் லட்சுமி படம் வைத்து வெள்ளிக்கிழமைகளில் தூபம் காட்டி, தீபாராதனை செய்ய வேண்டும்.

 • உப்பு பாத்திரத்தில் உப்பு குறையாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். எட்டுவித நல்லெண்ணை கலந்து காலையும் மாலையும் தீபம் ஏற்றினால் லட்சுமிக்கு மிகவும் பிடிக்கும்.

 • லட்சுமி, வழிபாட்டின் போது மறக்காமல் அஷ்டலட்சுமி ஸ்தோத்திரம் சொல்வது மிகவும் நல்லது.

 • நடு நிலை தவறி உறவினர்களுக்கு அநீதி இழைத்து விட்டவர்கள், வரலட்சுமி விரதம் இருந்தால் அந்த பாவத்தில் இருந்து நிவர்த்தி பெறலாம்.

 • வரலட்சுமி பூஜைக்கு உங்கள் வீட்டுக்கு வருபவர்களுக்கு உங்கள் சக்திக்கு ஏற்ப தாம்பூலம் கொடுக்கலாம். ஆனால் உங்கள் விருந்தாளிகளிடம் நீங்கள் காட்டும் அன்பே முக்கியமானது.

வரலட்சுமி விரதத்தால் ஏற்படும் நன்மைகள்

 • லட்சுமி வழிபாட்டால் நீண்ட ஆயுள், புகழ், செல்வம், உடல் நலம் உண்டாகும். வரலட்சுமி விரத பூஜை செய்தால் உடனடியாக திருமண யோகம் கைகூடும்.

 • இந்த விரதத்தை அனுஷ்டிக்கும் பெண்மணிகள் இவ்வுலகில் சகல போகங்களை அனுபவித்து பின் வைகுந்தம் சேருவார்கள்.

 • வரலட்சுமியை எந்த அளவுக்கு தாமரை மலர்களால் அலங்கரித்து வழிபாடு செய்கிறோமோ, அந்த அளவுக்கு புண்ணியம் சேரும்.

 • இந்த விரதத்தை அனுஷ்டிக்கும் பெண்மணிகள் இவ்வுலகில் சகல போகங்களை அனுபவித்து பின் வைகுந்தம் சேருவார்கள்.

 • இந்த விரதத்தை ஆண்கள் கடை பிடித்தால் அழகிய மனைவியை அடையாலம்.

 • வரலட்சுமி விரதம் இருக்கும் பெண்களிடம் அஷ்ட லட்சுமிகளும் மகிழ்ந்து அன்புடன் இருப்பார்களாம்.

 • வரலட்சுமி விரதம் இருக்கும் பெண்களுக்கு தைரியம், வெற்றி, அரசு பதவி, குழந்தைப் பேறு,கல்வி உள்ளிட்ட எல்லா வளங்களும் வந்து சேரும்.

 • வரலட்சுமி விரதம் இருப்பவர்களின் பாவ, புண்ணியத்துக்கு ஏற்பவே லட்சுமி நமக்கு செல்வத்தை வழங்குவாள்.

மேலும் ஆன்மீகம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers