ஆடி வெள்ளியன்று விரதம் இருப்பதனால் என்ன பயன் தெரியுமா?

Report Print Kavitha in ஆன்மீகம்

ஆடி மாதத்தில் வரும் முதல் வெள்ளிக்கிழமை இன்று. ஆடி மாதம் என்றாலே அது அம்மனுக்குரிய மாதம் என்பார்கள்.

எத்தனை வெள்ளிக்கிழமைகள் வந்தாலும் ஆடி வெள்ளிக்கு என்று ஒரு தனிப்பெருமை உண்டு.

சூரியன் கடகத்தில் சஞ்சரிக்கும் மாதமான ஆடி மாதம் இறைவியை நாடிச் சென்றவர்களுக்கெல்லாம் கோடி கோடியாய் நற்பலன்கள் கொடுக்கும் மாதமாகக் கருதப்படுகின்றது

ஆடி வெள்ளியன்று விரதம் இருப்பதனால் கோடி பயன் என்று நம் முன்னோர்கள் அடிக்கடி கூறுவார்கள். இன்று விரதம் இருந்தால் என்ன என்ன பயன் என்று பார்ப்போம்.

  • ஆடி வெள்ளியன்று குத்துவிளக்கு பூஜை செய்து சுமங்கலிப் பெண்களுக்கு ரவிக்கைத்துணி, தேங்காய், பழம், வெற்றிலை பாக்கு, மஞ்சள், குங்குமம் வைத்துக் கொடுத்தால் நற்பலன்கள் வந்து சேரும். இல்லத்தில் மங்கலம் உண்டாகும்.
  • சகல சவுபாக்கியங்களையும் அள்ளி தரும் ஆடி வெள்ளி வழிபாட்டின் மூலம் சுமங்கலி பெண்களில் கணவர் ஆயுள் கூடும், மணமாகாத பெண்களுக்கு திருமண பாக்கியம் கைகூடும்.
  • மணமாகி குழந்தையில்லாத தம்பதியருக்கு குழந்தை பாக்கியம் கிட்டும். வறுமை நீங்கி செல்வம் தழைத்தோங்கும்.
  • ஆடி வெள்ளிக்கிழமைகளில் நமது வீட்டில் அம்மன் வழிபாடு மேற்கொள்வது முதல், விரதமிருந்து காவடி எடுப்பது, பொங்கல் வைப்பது, ஆலயங்களில் நடைபெறும் சிறப்பு யாகங்களில் கலந்து கொள்வது போன்றவை நடைபெறும்.
  • ஆடி வெள்ளியன்று துர்க்கையம்மனை ராகு காலத்தில் எலுமிச்சை விளக்கு ஏற்றி வழிபாடு செய்வதனால் மணமாகாத கன்னி பெண்களுக்கு நல்ல வரன் கிடைக்கும்.
  • துன்பம் விலகும். எதிரிகள் தொல்லை ஒழியும்.

மேலும் ஆன்மீகம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்