நாக தோஷத்தை விரட்டும் போகரின் பரிகாரம்

Report Print Kavitha in ஆன்மீகம்

ராகு - கேதுவின் ஒளிக்கற்றை, அதாவது கிரகணங்களால் பாதிக்கப்படுபதனால் ஏற்படும் விளைவுகளை நாக தோஷம் என்கிறோம்.

நாக தோஷம் உள்ளவர்கள் தங்களையும் தங்களின் சந்ததிகளையும் பாதிப்புகளில் இருந்து காத்து கொள்ள போகர் சித்தர் தனது “போகர் 12000” நூலில் குறிப்பிடப்பட்டுள்ள பரிகாரம் ஒன்றினை பார்ப்போம்.

பரிகாரம்
  • நாக சதுர்த்தி திதியன்று அரச மரம் ஒன்றின் அடியில் நாக எந்திரம் ஒன்றினை பீடத்தில் அமைத்து கொள்ள வேண்டும்.
  • அதன் மேல் சிவலிங்கத்தினை ஏந்திய வண்ணம் இருக்கும் நாகத்தின் கருங்கல் சிலையினை பிரதிஷ்டை செய்ய வேண்டும்.
  • நாகத்தின் சிலையானது இரண்டரை அடி (பீடத்துடன் சேர்த்து) உயரத்திற்கு குறைவாகவும், பாம்பின் உடல் மூன்று அல்லது ஐந்து சுற்றுக்களைக் கொண்டதாகவும் இருக்கவேண்டும்.
  • பிரதிஷ்டை செய்யும் தினத்தன்று, பாலும், பழமும் மட்டுமே உணவாக எடுத்துக் கொண்டு விரதமிருந்து, பயபக்தியுடன் இந்த கடமையை செய்திடல் வேண்டும் .

நாகதோஷம் உள்ளவர்கள், நாக சதுர்த்தி திதியன்று, போகர் கூறியபடி நாகர் சிலையினை பிரதிஷ்டை செய்து வணங்கி வழிபட்டால் நாகதோஷத்தில் இருந்து நிரந்தரமாய் விடுபட்டு சீரும் சிறப்புடனும் வாழலாம்.

மேலும் ஆன்மீகம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...