யார் இந்த மூதேவி தெரியுமா? தெரிந்து கொள்ளுங்கள்

Report Print Kavitha in ஆன்மீகம்
258Shares
258Shares
ibctamil.com

மூத்த தேவி’ எனும் சொல்லே மருவி ‘மூதேவி’ என்றாயிற்று. மூத்த தேவி என்பவள், சில இந்துதர்ம நூல்களில் குறிப்பிடப்படும் துர்தேவதை ஆவாள்.

மூதேவி என்பவள் சீதேவியின் (லட்சுமி) தமக்கை.

இவர் பெயரை சொல்லி ஒருவரை திட்டக்கூடாது என்று நம் முன்னோர்கள் நம்மிடம் அடிக்கடி சொல்லிவைத்திருக்கிறார்கள்.

உண்மையில் மூதேவி யார் அவரின் சிறப்புக்கள் தமிழரை எங்கனம் பெருமை படுத்துகிறது என்பதை தெரிந்துகொள்வோம் வாருங்கள்.

தவ்வை என்பவர் பெண் தெய்வங்களுள் ஒருவராவார்.இவரை மூதேவி, ஜோஷ்டா தேவி, மூத்தோள் என பல பெயர்களில் அழைக்கின்றனர்.

இவரைத்தான் துரதிஷ்டத்தின் கடவுள் என பின்னாளில் திரித்துவிட்டதாக நம்புகின்றனர் பலர்.

தவ்வை என்னும் மூதேவி சனீஸ்வரனின் மனைவியாகவும் போற்றப்படுகிறார்.

இவரை பல அரும்பெரும் தமிழ் நூல்கள் குறிப்பிடுகின்றன.

திருவள்ளுவரும், ஔவையும் இவரின் பெயர்களை குறிப்பிட்டுள்ளனர்.

ஆதிகாலத்தில் மூதேவி விவசாயத்தின் காவல் தெய்வமாகவும், வளமைக்கு அதிபதியாகவும் இருந்தவர் இவரே.

மூதேவியின் தோற்றம்

ஆகம நூல்கள் மூத்த தேவியின் தோற்றத்தைப் பற்றி விளக்குகின்றன. அவள் அகோரமான மற்றும் அலட்சணமான தோற்றத்தை உடையவள் என்றும், காக்கை கொடியினை ஏந்தியவள் என்றும் கூறப்படுகின்றாள். இதனாலே மூத்த தேவியை ‘காக்கைக் கொடியாள்’ என்றும் அழைப்பார்கள்.

மூதேவியின் வரலாறு

புராணக் கதைகள் மூத்த தேவியின் வரலாற்றைப் பற்றி விளக்குகின்றன. பத்ம புராணத்தின் படி, சுரர்களும் அசுரர்களும் பாற்கடலைக் கடையும் போது, அதனிலிருந்து வெளிபட்ட ஆலகால விஷத்திலிருந்து பிறந்தவளே மூத்த தேவி. அதன்பிறகு வெளிபட்ட அமிர்தத்திலிருந்து பிறந்தவள் ஸ்ரீதேவியாகிய லக்ஷ்மி.

மூதேவி எங்கே குடியிருப்பாள்?

ஸ்ரீசூக்தம் உட்பட்ட இதர முக்கிய நூல்கள் அலக்ஷ்மியாகிய மூதேவி எங்கே குடியிருப்பாள் என்பதற்கு சில குறிப்புகளைத் தருகின்றன.

  • சண்டை சச்சரவுகள் நிறைந்த இல்லம்.
  • பொய்யும் கடுமையான வார்த்தையும் பேசுபவரிடம்.
  • தீமைகளும் கொடுமைகளும் செய்பவரிடம்.
  • உடல்தூய்மை, மனத்தூய்மை, சுற்றுச்சூழல் தூய்மை, வாக்குத்தூய்மை மற்றும் செயல்தூய்மை ஆகிய ஐந்து வகை தூய்மைகளையும் கடைப்பிடிக்காதவரிடம்.
  • பெரியவர்களை மதிக்காதவரிடம்.
  • போலியான சாமியார்களிடம்.
  • வழிபாடும் பூஜைகளும் இல்லாத இல்லத்தில்.
  • சுயநலமிக்கவர்களிடம்.
  • தானம், தயை, தன்னடக்கம் எனப்படும் (பிரம்மதேவர் உபதேசித்த) மூன்று பண்புகள் துளியும் இல்லாதவரிடம்.
  • காமம், க்ரோதம், லோபம், மோகம், அஹங்காரம், மாத்ஸர்யம் ஆகிய அரிஷத்வர்கம் எனப்படும் ஆறுவகை தீயகுணங்கள் கொண்டிருப்பவரிடம்.

மேலும் ஆன்மீகம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்