உங்கள் வீட்டில் வாஸ்து தோஷம் இருக்கா? இதோ எளிய பரிகாரம்

Report Print Kavitha in ஆன்மீகம்
197Shares
197Shares
ibctamil.com

நாம் எவ்வளவு தான் வாஸ்து பார்த்து வீடு கட்டினாலும் சிறுசிறு வாஸ்து தோஷங்கள் இருக்கத்தான் செய்கின்றன.

அவற்றால் எந்த இடைஞ்சலும் வராத அளவுக்கு சின்ன சின்ன பரிகாரங்கள் செய்து, வீட்டிலேயே அவற்றை நிவர்த்தி செய்து கொள்ள முடியும்.

பரிகாரங்களை சரிவர செய்து வந்தால் வாஸ்துவினால் ஏற்படும் தோஷம் விலகி நலன் பெறலாம் .

 • தினமும் காலையில் கிழக்கு நோக்கி தீபமேற்றி, ‘ஓம் நமோ வாஸ்து புருஷாய நமஹ’ என்ற மந்திரத்தை 27 முறை ஜபியுங்கள்.
 • வீட்டில் தினமும் ஊதுவர்த்தி காட்டி சாமி படங்களுக்கு பூஜை செய்து வந்தாலே போதும். வீட்டில் எந்த கெட்ட சக்தியும் அண்டாது.
 • செவ்வாய், வெள்ளிக் கிழமை மாலையில் வீடு முழுவதும் சாம்பிராணி புகை கூழ, ஓம் என்னும் பிரணவ மந்திரம், கந்தசஷ்டிக் கவசம், சிவபுராணம், லலிதா சகஸ்ரநாமம், விஷ்ணு சகஸ்ரநாமம், காயத்ரி மந்திரம் போன்ற ஸ்லோகங்கள் ஒலிப்பது நல்லது.
 • ஆண்டுக்கொரு முறை கணபதி ஹோமம் நடத்தினால் நல்லது. வெள்ளிக்கிழமையில் துர்க்கைக்கு எலுமிச்சம் பழத்தில் தீபமேற்றலாம்.
 • வீட்டின் வடகிழக்கில் துளசி, நந்தியாவட்டை போன்ற பூச்செடிகள் வளர்க்கலாம்.
 • வீட்டுக்குள் ஆட்கள் இருக்கும்பொழுது உள்புறமாக கதவை அடைத்து வைக்கக்கூடாது.
 • கதவை பெரும்பாலும் திறந்து தான் வைத்திருக்க வேண்டும்.
 • வீட்டின் வடகிழக்குப் பகுதி எப்போதும் சுத்தமாக இருக்க வேண்டும் அந்த மூலையில் எந்த பொருட்களையும் போட்டு அடைத்து வைத்திருக்கக் கூடாது.
 • மற்ற இடங்களை விடவும் வடகிழக்குப் பகுதி அதிக அளவு சுத்தமாக இருப்பது அவசியம்.
 • கதவுகளின் இடுக்குகளில் எண்ணெய் விட்டு வைத்திருக்க வேண்டும்.
 • கதவுகளைத் திறக்கும்போதும் மூடும்போதும் கீச்சு கீச்சென சத்தம் வரக்கூடாது. அதனால் கூட வீட்டுக்கு தோஷம் உண்டாகுமாம். அதனால் அடிக்கடி கிரீஸ் தடவி, கதவுகளை சத்தமில்லாமல் வைத்திருக்க வேண்டும்.
 • வீட்டிலிருக்கும் மோட்டார் பம்புகளை வடகிழக்குப் பகுதியில் தான் வைத்திருக்க வேண்டும். அப்படி வைப்பதால் வீட்டில் அமைதி உண்டாகும்.
 • பக்கத்தில் ஏதேனும் மாடுகள் இருந்தால் அவற்றிற்கு தினமும் ஏதாவது உணவை ஊட்டிவிடுங்கள்.
 • தினமும் மாலை நேரங்களில் கட்டாயமாக வீடுகளில் விளக்கேற்றி வைக்க வேண்டும்.
 • தண்ணீர் தொட்டி இருக்கும் இடத்துக்கு அருகே விளக்கேற்றி வைத்தால் வீட்டில் உள்ள அனைத்து தோஷங்களும் நீங்கும்.

மேலும் ஆன்மீகம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்