அட்சய திருதியை ஏன் தங்கம் வாங்க சிறந்தது?

Report Print Kavitha in ஆன்மீகம்

பௌர்ணமி அல்லது அமாவாசைக்குப் பிறகு வரும் மூன்றாவது திதி திருதியை, சித்திரை மாதத்தில் அமாவாசைக்கு பின் வரும் வளர்பிறை அட்சய திருதி என்றழைக்கப்படுகின்றது.

அட்சயம் என்றால் தேயாது, குறையாது, வளர்தல் என்று பொருள் தரும், அன்றைய தினம் சந்திரனும், சூரியனும் உச்சம் பெற்று இருக்கும்.

அட்சய திருதியை தினத்தில் தான் திருமாலின் 6-வது அவதாரமாகிய பரசுராமன் அவதரித்ததாகவும், சொர்க்கத்தில் இருந்து கங்கை பூமிக்கு வந்த தினமாகவும், திரேதா யுகத்தின் தொடக்கம் அட்சய தினத்தில்தான் வந்ததாகவும் புராணங்களில் குறிப்பிடப்படுகிறது.

அட்சய திருதியை அன்று தங்கம், வெள்ளி, நிலம் உள்பட ஏதாவது ஒன்றை வாங்கினால் அது பல மடங்காக பெருகி செல்வம் கொழிக்கும் என்ற ஜீதிகம்.

இதனால் தான் அட்சய திருதி தங்கம் வாங்க சிறந்த நாளாக கருதப்படுகின்றது.

மேலும் ஆன்மீகம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers