ஒரு வருஷம் துர்க்கையை பூஜித்தால் முக்தி கைவசமாகும்

Report Print Gokulan Gokulan in ஆன்மீகம்

செவ்வாய் கிழமைகளில் துர்க்கை அம்மனை வழிபடுவது மிகவும் நன்று.

அஷ்டமி தினத்தில் துர்க்கைக்கு அரளி, ரோஜா, செந்தாமரை, செம்பருத்தி போன்ற சிவப்பு புஷ்பங்கள் கொண்டு அர்ச்சனை செய்யலாம்.அதோடு சிவப்பு வஸ்திரம் அம்பாளுக்கு அணிவிக்கலாம்.

துர்க்கைக்கு நல்லெண்ணை தீபம் ஏற்றி சண்டிகைதேவி சகஸ்ர நாமம் கொண்டு தான் அர்ச்சனை செய்ய வேண்டும். இவை சக்தி வாய்ந்தவை.

துர்க்கையை வழிபடும்போது துர்கா சப்தசதி என்ற 700 ஸ்லோகங்கள் படிப்பது நல்ல மன அமைதியை தரும்.

உங்கள் மனதில் உள்ள கவலைகள் நீங்கவும் , நீண்ட நாள் கனவுகள் நிறைவேறவும் துர்க்கை அம்மனை வழிபட்டு வாருங்கள்.

பரசுராமருக்கு அமரத்வம் அளித்தவள் துர்காதேவி.

துர்க்கையை அர்ச்சிப்பவர்களுக்கு பயமோ மனத்தளர்ச்சியோ சோகமோ ஏற்படுவதில்லை.

ஸ்ரீ துர்க்காவை பூஜை செய்தவன் சொர்க்க சுகத்தை அனுபவித்து பின் நிச்சயமாக மோட்சத்தையும் அடைவார்கள்.

ஒரு வருஷம் துர்க்கையை பூஜித்தால் முக்தி கைவசமாகும்.

தாமரை இலையில் தண்ணீர் போல துர்க்கா அர்ச்சனை செய்பர்களிடத்தில் பாதகங்கள் எல்லாம் தங்குவதில்லை.

தூங்கும் போதும் நின்ற போதும், நடக்கும் போதும் கூட தேவி துர்க்கையை வணங்குபவனுக்கு சம்சார பந்தம் ஏற்படுவதில்லை.

ஸ்ரீ துர்கா தேவிக்கு மிகப்பிடித்த புஷ்பம் நீலோத்பலம். இது எல்லா புஷ்பங்களையும் விட நூறு மடங்கு உயர்ந்தது. இந்த மலர்கள் கொண்டு துர்க்கை அம்மனை வழிபடுவது மிகவும் நன்று

துர்க்கை என்ற சொல்லில் `த்', `உ', `ர்', `க்', `ஆ' என்ற ஐந்து அட்சரங்கள் உள்ளன. `த்' என்றால் அசுரர்களை அழிப்பவள். `உ' என்றால் விக்னத்தை (இடையூறை) அகற்றுபவள். `ர்' என்றால் ரோகத்தை விரட்டுபவள். `க்' என்றால் பாபத்தை நலியச் செய்பவள். `ஆ' என்றால் பயம் சத்ரு இவற்றை அழிப்பவள் என்பது பொருளாகும்

மேலும் ஆன்மீகம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்