மணமக்கள் அக்கினியை ஏன் 7 தரம் சுற்றுகின்றார்கள் தெரியுமா?

Report Print Gokulan Gokulan in ஆன்மீகம்
111Shares

திருமண பந்தத்தில் இணையும் மணமகனும் மணப்பெண்ணும் தாலி கட்டியவுடன் ஏழு அடிகள் இருவரும் சேர்ந்து அக்கினியை சுற்றி நடந்து வருமாறு புரோகிதர் கூறுவார்.

அப்படி அவர்கள் இருவரும் சேர்ந்து நடந்து வருவதை சம்ஸ்கிருதத்தில் சப்தபதி என்று கூறுவார்கள்.

அவ்வாறு இருவரும் சேர்ந்து ஏழு அடிகள் நடக்கும் போது அவர்கள் வைக்கின்ற ஒவ்வொரு அடியிலும் ஒவ்வொரு அர்த்தம் அடங்கியுள்ளது.

முதலாவது அடியில் பஞ்சமில்லாமல் வாழ வேண்டும் என்பதற்காக எடுத்துவைப்பார்கள்.

இரண்டாவது அடியில் ஆரோக்கியமாக வாழ வேண்டும் என கூறவேண்டும்.

மூன்றாவதாக அடியை வைக்கும்போது நற்காரியங்கள் எப்பொழுதும் நடக்க வேண்டும் என பிரார்த்திக்கவேண்டும்.

நான்காவது அடி வைக்கும்போது சுகத்தையும் , செல்வத்தையும் அளிக்க வேண்டும் என வேண்டவேண்டும்.

ஐந்தாவது அடியில் லக்ஷ்மி கடாக்ஷம் நிறைந்து இருக்க வேண்டும் என கூறவேண்டும்.

ஆறாவது அடியில் நாட்டில் நல்ல பருவங்கள்நிலையாக தொடர வேண்டும் என பிரார்த்திக்கவேண்டும்.

அதுபோல ஏழாவது அடியில்: தர்மங்கள் நிலைக்க வேண்டும் என பிரார்த்திகவேண்டும்

இந்த சம்பிரதாயத்தில் ஊடாக மனிதர்களிடம் இருக்கும் மிகவும் சூக்ஷமமான மனோவியல்விசயத்தை இந்து தர்மத்தில் உணர்த்தியுள்ளார்கள் நம் முன்னோர்கள்.

இரண்டு நபர்கள் ஒன்றாக ஏழு அடிகள் நடந்தால் அவர்களுக்குள் சினேகிதம்உண்டாகும் என்பது சாஸ்திரம்.

உதாரணமாக நாம் சாலையில் நடக்கும் போது அறிமுகமில்லாத ஒருவரை கடக்கும் போது சில விநாடிகள் ஒன்றாய் நடக்க நேர்ந்தால் நன்றாக கவனியுங்கள். ஏழு அடிகள் நடப்பதற்குள் நாம் அவர்களை வேகமாக தாண்டிவிடுவோம் அல்லது அவர்களைமுன்னே போகவிட்டுவிடுவோம். முழுமையாக ஏழு அடிகள் ஒன்றாக நடக்க மாட்டோம்.

இரண்டு மனிதர்கள் ஒன்றாக நடக்கும் போது அவர்களுக்குள் நடக்கும் மனோவியல் மாற்றங்கள் ஏழு அடிகளுக்குளாக நடந்து விடும் என்பது ஒரு சூக்ஷமமான விஷயம்.

இதை மிகவும் நுணுக்கமாக ஆரய்ந்து நம் இந்து தர்மத்தில் அதை ஒரு சம்பிரதாயமாக வைத்திருப்பதை நாம் அனுபவித்து உணர வேண்டும்.

இந்து தர்மத்தில் எதுவும் மூடநம்பிக்கை இல்லை. பல நுணுக்கமான அறிவியல் மனோவியல் விஷயங்கள் நிறைந்ததுதான் இந்து தர்மம். அதனை பின்பற்றி வாழ்ந்தால் வாழ்வின் உயர்நிலையை நாம் அடையமுடியும்

மேலும் ஆன்மீகம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்