விரதம் இருப்போர் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டியவை

Report Print Kavitha in ஆன்மீகம்

விரதம் இருப்பதன் முக்கிய நோக்கம் மனம், உடல் இரண்டையும் சுத்தப்படுத்துவது, விரதம் இருக்கும் போது கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் குறித்து தெரிந்து கொள்வோம்.

 • விரதத்திற்கு முதல் நாளே வீட்டினை சுத்தப்படுத்தி மஞ்சள் நீர் தெளித்தல் அவசியம்.
 • ஒவ்வொரு விரதத்திற்கும் வித்தியாசமான உணவு முறைக் கட்டுப்பாடுகள் உண்டு, அதற்கு ஏற்றபடி உணவினை உட்கொள்ளுதல் நன்று.
 • விரத நாளன்று அதிகாலை எழுந்து நீராடி காலையும், மாலையும் வீட்டின் பூஜை அறையில் விளக்கேற்றி, விபூதி பூசி வழிபாடு செய்தல் மிகவும் நன்று.
 • பெண்கள் மாத விலக்காகி ஏழு தினங்கள் ஆன பின்பே விரதம் மேற்கொள்ள வேண்டும்.
 • குழந்தை பிறந்து நாற்பத்து எட்டு தினங்களுக்குப் பிறகே குழந்தை பெற்ற பெண்கள் விரதம் கடைப்பிடிக்க வேண்டும்.
 • குடும்ப உறுப்பினர் எவரேனும் இறந்துவிட்டால், அவர்கள் இறந்து மூன்று மாதங்களுக்குப் பிறகே குடும்பத்திலுள்ள மற்ற உறுப்பினர்கள் விரதங்களைக் கடைப்பிடிக்க வேண்டும்.
 • விரதம் இருப்பவர்கள் ஆணாக இருந்தால் முதலில் குடும்பத்தாரின் அனுமதி பெற்றே விரதம் இருக்க வேண்டும்.
 • கன்னிப் பெண்களாயின் பெற்றோரின் அனுமதியுடனும், மணமான பெண்கள் கணவனின் தாயாரான மாமியாரின் அனுமதி பெற்ற பின்னும் விரதம் இருக்க வேண்டும்.
 • பிறருக்கு உடன்பாடு இல்லாத சூழ்நிலையில் இருக்கும் விரதங்கள் முழுப்பலனை தராது.
 • விரதம் இருப்பவர்கள் பிறர் மீது கோபப்படுதல், பிறரைப் பற்றி தவறாகப் பேசுதல், பிறர் மனம் புண்படும்படி கேலி செய்தல், பிறரிடம் பேசாதிருத்தல், அதிகமாகப் பேசுதல் ஆகிய எதுவுமே செய்யக்கூடாது
 • விரதம் என்ற பெயரை வைத்துக் கொண்டு அடிக்கடி நீராகாரம் சாப்பிடக்கூடாது.
 • ஓய்வு தேவை என்று பகலில் படுத்துத் தூங்கக்கூடாது.
 • நாம் விழித்திருந்து இறைவழிபாட்டில் நமது சிந்தனையைச் செலுத்த வேண்டும்
 • விரதத்தின் போது அசைவ உணவுகளை சாப்பிடுதல், பிறருக்கு சமைத்துக் கொடுப்பது கூடத் தவறாகும்.
 • வெற்றிலை பாக்கு போடுதல், புகைபிடித்தல், மது அருந்துதல், சூதாடுதல் ஆகியவையும் கூடாது.

மேலும் ஆன்மீகம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்