வீட்டில் தங்கம் சேர இந்த பரிகாரத்தை செய்திடுங்க

Report Print Kavitha in ஆன்மீகம்

வீட்டில் மகாலட்சுமி இருந்தால் செல்வம் செழித்து இருக்கும் என்று முன்னோர்கள் கூறுவதுண்டு, எனினும் சில பரிகாரங்கள் மூலமாகவும் செல்லவத்தை பெறலாம்.

செவ்வாய்க் கிழமை அவிட்டம் நட்சத்திரத்தில், காலை எழுந்தவுடன் யாருடனும் பேசாமல் ஒரு பித்தளைக் குடத்தில் துவரம்பருப்பு, அரிசி, கொண்டைக்கடலை இவை மூன்றையும் சம அளவில் கலந்து நிரப்பி கொள்ள வேண்டும்.

அந்த குடத்தின் மேல் ஒரு தேங்காயை கவிழ்த்து வைக்க வேண்டும்.

பிறகு குடும்பத்தாருடன் அருகில் உள்ள முருகன் கோவிலுக்குச் சென்று, சுவாமியின் முன் குடத்தை வைத்து, அபிஷேக ஆராதனைகள் செய்தல் வேண்டும்.

அர்ச்சகரிடம், ஸ்வர்ண தோசம் நீங்க செவ்வாய் கிரக பூஜைத்தானம் என்று கூறி அவரைப் பெற்றுக் கொள்ளும்படி கூறி அவரிடம் குடத்தை கொடுத்து விட்டு திரும்பிப் பார்க்காமல் வீடு வந்து விட வேண்டும்.

பிறகு கடலை அவித்து தானம் செய்ய வேண்டும்.

இப்படி பரிகாரம் செய்தால் வீட்டில் தங்கம் செழித்து நிலையாகத் தங்கும்.

மேலும் ஆன்மீகம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்