108 ஆண்டுகளுக்கு ஒரு முறை வரும் அபூர்வ பிரதோஷம்

Report Print Kavitha in ஆன்மீகம்

சிவனுக்குரிய வழிப்பாடுகளில் சிவராத்திரியும், பிரதோஷமும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகின்றன.

இன்று ஹேவிளம்பி ஆண்டு வரும் பிரதோஷம் 108 ஆண்டுகளுக்கு ஒரு முறை வரும் மிகவும் அபூர்வ பிரதோஷம் என்று அழைக்கப்படுகின்றது.

இந்த பிரதோஷத்தின் மகிமை என்னவென்றால் சிவனுக்கு உகந்த நாள் நட்சத்திரம் திதி ஒன்றாக வரும் அபூர்வ அமைப்பு கொண்டது.

இந்த நாளில் திங்கள் கிழமை, திருவாதிரை நட்சத்திரம், திரயோதசி மற்றும் இந்த மூன்றும் ஒன்றாக வரும் அபூர்வ நாள்.

இந்த 108 அபூர்வ பிரதேச நாளன்று சிவனுக்கு நாம் சந்தனம் , பால் , இளநீர் கொண்டு சிவனுக்கும் நந்திக்கும் அபிஷேகம் செய்து வில்வ மாலை அணிவித்து நாம் வழிபாடு செய்தால் நாம் தெரிந்தும் தெரியாமல் செய்த பாவங்கள் அனைத்தும் விலகும் என்பது ஜீதிகம்.

இந்த அபூர்வ நாளில் விரமிருந்தால் ஜாதகத்தில் உள்ள சந்திர தோஷம் ,ராகு கேது போன்ற நவக்கிரக தோஷங்கள் திருமண தடை நீங்கும்.

தொழில் மேன்மை அடையும் ,கடன் பிரச்சனை தீரும்,திருமணம் தடை நீங்கும், போட்டி தேர்வு எழுதுபவர்களுக்கு எளிதில் வெற்றி கிட்டும்.

ஒரு கைப்பிடி வெல்லமும் அரிசியும் சேர்த்தது, ஒரு பிடி வன்னி இலை, ஒரு பிடி அருகம் புல் ஆகியவற்றை நந்தியின் கொம்புகளுக்கிடையில் அர்ப்பணித்து, விளக்கேற்றி நந்தியையும் சிவனையும் தொழுதால் சனி பகவானால் உண்டாகும் சகல துன்பங்களும் விலகிப் போகும்.

நந்திக்கும் சிவனுக்கும் வில்வ மாலை, திராட்சை மாலை அணிவித்தல் மிகவும் சிறப்புடையது.

பிரதோஷ நாளில் சிவனை தரிசித்தால் கடன், வறுமை, நோய்ப்பயம் போன்றவை விலகும்.

மேலும் ஆன்மீகம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்