கடவுளுக்கு நேர்த்திக் கடனாக சாக்லேட் செலுத்தும் பக்தர்கள்: எங்கு தெரியுமா?

Report Print Kabilan in ஆன்மீகம்
77Shares

கேரளாவில் உள்ள முருகன் கோயில் ஒன்றில், நேர்த்திக்கடனாகவும், பிரசாதமாகவும் 'Munch' சாக்லேட் வழங்கப்படுகிறது.

கேரள மாநிலம் ஆலப்புழா நகரின் புறநகர் பகுதியில் உள்ள ஊர் சுப்ரமணியபுரம். இங்கு 300 ஆண்டுகள் பழமை வாய்ந்த பாலமுருகன் கோயில் உள்ளது.

இந்த கோயிலை, உள்ளூர் மக்கள் ‘தெக்கன் பழனி கோயில்’ என்று அழைக்கின்றனர். இக்கோயிலில் நெய், வெண்ணெய், லட்டு போல ‘Munch' சாக்லேட் பிரசித்தி பெற்றிருக்கிறது.

இதன் பின்னணி குறித்து உள்ளூர் மக்கள் கூறுகையில், ‘சுமார் 8 ஆண்டுகளுக்கு முன்னர், இந்த கோயில் வளாகத்தில் விளையாடிக் கொண்டிருந்த இஸ்லாமியரின் குழந்தை ஒன்று, கோயில் மணியின் கயிற்றைப் பிடித்து ஒலிக்க வைத்தது.

அதனைக் கண்டு பதறிப்போன பெற்றோர், குழந்தையை கண்டித்து வீட்டுக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அன்றிரவு, குழந்தைக்கு கடுமையான காய்ச்சல் ஏற்பட்டு, குழந்தை ‘முருகா, முருகா’ என்று முணுமுணுக்கத் தொடங்கியுள்ளது.

மறுநாள், குழந்தையின் தாயார் கோயிலுக்கு சென்று நடந்த விவரத்தை தெரிவித்துள்ளார். அதன் பின்னர், பூசாரி கூறியபடி எண்ணெய், மலர்களை பரிகாரமாக அளித்துள்ளார்.

அப்போது, கருவறைக்கு சென்ற குழந்தை தனது கையில் இருந்த ‘Munch' சாக்லேட்டை, பாலமுருகன் சிலையிடம் வைத்துள்ளது. இதனைத் தொடர்ந்து, குழந்தையின் காய்ச்சல் குணமாகியுள்ளது’ என தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவத்திற்கு பிறகு, பாலமுருகனுக்கு பிடித்த பிரசாதம் ‘Munch' சாக்லேட் தான் என்ற செய்தி பரவத் தொடங்கியுள்ளது. இதனைத் தொடர்ந்து, கோயிலுக்கு வரும் பக்தர்கள் பெட்டிப் பெட்டியாக ‘Munch' சாக்லேட்டுகளை வாங்கி வந்து, நேர்த்திக்கடன் செலுத்தி வருகின்றனர்.

மேலும், வெளிநாடுகளில் இருந்தும் பக்தர்கள் சாக்லேட்டுகளுடன், இங்கு வருகை புரிகின்றனர். கோயிலுக்கு வரும் குழந்தைகளுக்கு இந்த சாக்லேட்டே பிரசாதமாகவும் வழங்கப்படுகிறது.

மேலும் ஆன்மீகம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்