பழநியில் வெளிநாட்டவர்கள் மொட்டையடியத்து காணிக்கை

Report Print Kavitha in ஆன்மீகம்
230Shares
230Shares
lankasrimarket.com

தைப்பூச விழாவை முன்னிட்டு அமெரிக்காவைச் சேர்ந்த பக்தர்கள் பழநி முருகன் கோவிலில் சிறப்பு வழிபாடு செய்தனர்.

அமெரிக்காவைச் சேர்ந்த 20 பேர் கடந்த 10 ஆண்டுகளாக, தைப்பூச விழா நேரத்தில் ஆன்மிக சுற்றுலாவாக முருகப் பெருமானின் ஆறுபடை வீடுகள், பஞ்ச பூத லிங்க கோவில்களில் தரிசனம் செய்து வருகின்றனர்.

அவர்கள் நேற்று பழநி முருகன் கோவிலுக்கு தமிழர்களின் பாரம்பரிய ஆடையான வேட்டி, சேலை அணிந்து வந்தனர்.

உச்சி கால பூஜையில் மூலவர் முருகனை தரிசனம் செய்து போகர் சன்னதியிலும் வழிபாடு செய்தனர்.

இதில் அமெரிக்கரான டாக்ல்ஸ்புருஷ் என்பவர் சுந்தரமூர்த்தி என பெயரை மாற்றிக் கொண்டார்.

மேலும் இவர்களுடன் வருகை தந்த கேத் என்ற பெண் உட்பட, மூவர் இறைவனுக்கு முடி காணிக்கை செலுத்தினர்.

சென்னையைச் சேர்ந்த வழிகாட்டி ஜெகநாதன்பாபு கூறியதாவது, நம் கலாசாரம் அவர்களுக்கு பிடித்து விட்டதால் தமிழ் கற்று வருவதாகவும், வேட்டி- சேலையை விரும்பி அணிந்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும் ஆன்மீகம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்