இந்த 2 கிழமைகள் மட்டும்.. இவற்றை தெரியாமல் கூட செய்து விடாதீர்கள்

Report Print Printha in ஆன்மீகம்
602Shares
602Shares
ibctamil.com

வாரத்தின் மூன்றாவது நாளான செவ்வாய் கிழமை முருகனுக்கும், ஆறாம் நாளான வெள்ளிக் கிழமை லட்சுமிக்கும் உகந்த நாட்களாக கருதப்படுகிறது.

எனவே இவ்விரு தினங்களிலுமே ஒருசில விடயங்களை பின்பற்ற வேண்டியது மிகவும் அவசியமாகும்.

செவ்வாய் மற்றும் வெள்ளி கிழமைகளில் செய்ய வேண்டியவை?

  • 5 முகங்கள் கொண்ட குத்து விளக்கை ஏற்றி திருமகளை வழிபட வேண்டும்.

  • சங்கு, நெல்லிக்காய், பசுவின் சாணம், கோ ஜலம், தாமரைப் பூக்கள் ஆகியவற்றை வீட்டில் வைத்து பூஜை செய்ய வேண்டும்.

  • அதிகாலை பிரம்ம முகூர்த்தத்திலே படுக்கையை விட்டு எழுந்துக் கொள்ள வேண்டும்.

  • வீட்டில் வெள்ளி நிறப் புறாக்களை வளர்க்க வேண்டும்.

செவ்வாய் மற்றும் வெள்ளி கிழமைகளில் செய்யக் கூடாதவை?

  • குத்து விளக்கை புஷ்பத்தினால் அணைக்க வேண்டும். அதை தவிர்த்து தானாகவும், ஊதியும் அணைக்கக் கூடாது.

  • இரவு நேரத்தில் வீட்டை பெருக்கினால் குப்பைகளை வெளியில் கொட்டக் கூடாது.

  • ஈரத்துணி அணிந்துக் கொண்டும், ஈரமான தலையுடனும் பூஜை செய்யக் கூடாது.

  • வாசல்படி, அம்மி, ஆட்டுக்கல், உரல் ஆகியவற்றில் உட்காரக் கூடாது.

  • விளக்கு ஏற்றிய பின்பு பால், தயிர், உப்பு, ஊசி ஆகிய பொருட்களை பிறருக்கு கொடுக்கக் கூடாது.

  • நம்முடைய வீட்டிற்குள் அல்லது வீட்டின் வெளியில் நகத்தை வெட்டக் கூடாது.

மேலும் ஆன்மீகம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்