ஹனுமன் குரங்கு வடிவத்தில் இருப்பது ஏன் தெரியுமா?

Report Print Printha in ஆன்மீகம்
308Shares
308Shares
ibctamil.com

இந்து கடவுள்களில் மிகவும் வலிமையானவராக போற்றப்படும் ஹனுமான், ராமாயண இதிகாசத்தில் சக்தியின் சின்னமாக இருப்பவர்.

வாயுவின் மகனான இவருக்கு பவன்புத்ரா என்ற பெயரும் உண்டு, ஆனால் அவருடைய சீடர்கள், பிரமச்சாரி என்று அழைப்பார்கள்.

குரங்குகளின் கடுவுளாக வணங்கப்படும் ஹனுமான், குரங்கு வடிவில் பிறந்ததற்கு பலவித கதைகள் கூறப்படுகிறது.

ஹனுமன் குரங்கு வடிவத்தில் இருப்பது ஏன்?

இந்துகளின் புராணங்களில் சிவனும், பார்வதியும் குரங்காக மாறி, வனங்களில் மகிழ்ச்சியாக இருந்தனர்.

அதனால் பார்வதி தேவி கர்ப்பமானார். மாறுவேடத்தில் இருக்கும் சிவ பெருமான் தன்னுடைய பொறுப்புகளை உணர்ந்து, வாயு தேவனிடம் கர்ப்பத்தில் இருக்கும் குழந்தையை எடுத்துக் கொள்ள கூறினார்.

பார்வதி தேவியின் கர்ப்பத்தில் இருக்கும் குழந்தையை வாயு தேவன் எடுத்து, ஆண் குழந்தை வேண்டும் என்று ஏங்கிக் கொண்டிருந்த அஞ்சனையின் கர்ப்பத்தில் வைத்தார்.

ஆண் குழந்தை வேண்டும் என்ற விருப்பத்தில், அஞ்சனை இறைவன் சிவபெருமானை நோக்கி தவம் செய்து கொண்டிருக்கிறாள்.

இன்னொரு பக்கம், ராமபிரானின் தந்தையான தசரத மகாராஜா குழந்தை இல்லாத காரணத்தால், குழந்தை வேண்டி சில பூஜையும் யாகமும் செய்து கொண்டிருக்கிறார்.

பூஜையின் பலனாக அவருக்கு ஒரு புனித பிரசாதம் கிடைக்கிறது. அந்த பிரசாதத்தில் ஒரு சிறு பகுதியை, வாயு தேவன் அஞ்சனைக்கு கொடுத்ததால், ஹனுமான் பிறந்ததாக கூறப்படுகிறது.

அஞ்சனையின் மகன் அஞ்சனை என்ற அப்சரஸ் குரங்கின் வடிவத்தை கொண்டவள். ஒரு ஆண் குழந்தை வேண்டும் என்ற விருப்பத்தில் அவள் சிவபெருமானை நோக்கி தவமிருந்ததாள்.

அந்த தவத்தின் பலனாக பார்வதி தேவியின் வயிற்றில் உருவான கருவை பெற்றாள். இதன் காரணமாக பிறந்தவர் தான் ஹனுமான்.

பிரம்மலோகத்தில் அழகிய அப்சரசாக இருந்தவர் அஞ்சனை. அஞ்சனைக்கு ஒரு முனிவர் சாபம் கொடுத்தார். அதாவது, அவள் காதலில் விழும் தருணம், அவளுடைய முகம் ஒரு குரங்காக மாறும் என்பது தான்.

அந்த சாபத்தில் இருந்து விமோசனம் தரும் பொருட்டு பிரம்மர் அவளை பூலோகத்தில் பிறக்க வைத்தார். பின்னாளில், அஞ்சனை, கேசரி என்ற குரங்கு மன்னனினிடம் காதல் வசப்பட்டாள்.

இருவரும் திருமணம் செய்து கொண்டனர். சிவ பெருமானின் பக்தையான அஞ்சனை, தவத்தில் ஈடுபட்டு, இறைவனை வழிபட்டு வந்ததால், மனம் குளிர்ந்த சிவபெருமான், தானே அவைக்கு மகனாக பிறந்து அவளுக்கு சாப விமோசனம் தர வேண்டும் என்று நினைத்தார்.

இந்த நேரத்தில், தசரத மகாராஜர், குழந்தை வேண்டி யாகம் புரிகையில் தவத்தில் பலனாக அவருடைய மனைவிகளுக்கு கிடைத்த பிரசாதத்தில் ஒரு பகுதியை, பரந்து வந்த ஒரு பருந்து பிடுங்கி சென்று அஞ்சனையின் கையில் போட்டது.

இறைவன் கொடுத்த பிரசாதம் என்று கருதி, அஞ்சனையும் அந்த பிரசாதத்தை உண்ணத் தொடங்கினாள்.அதனால் அவள் கர்ப்பம் அடைந்து அவளுக்கு ஹனுமான் குழந்தையாக பிறந்தார்.

ஆனால் பிரம்மர், ஸ்ரீ ராமருக்கு உதவ வேண்டும் என்ற நோக்கில், குரங்காக மாறி உருவெடுத்தார் என்றும் சில புராணங்கள் கூறுகின்றது.

மேலும் சிவபெருமான் ஹனுமனாக உருவெடுத்து ஸ்ரீ ராமராக அவதாரம் எடுத்த விஷ்ணுவிற்கு உதவினார் என்றும் சில வரலாறுகள் கூறுகின்றது.

மேலும் ஆன்மீகம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்