இந்த திசையில் பூஜை அறையை வைத்து விடாதீர்கள்..?

Report Print Printha in ஆன்மீகம்
342Shares
342Shares
ibctamil.com

வாஸ்து சாஸ்திரங்கள் பார்த்து வீட்டை அமைத்தாலும் அதில் பூஜை அறை வைக்கும் திசையும் வாஸ்துக்களின் படி அமைக்க வேண்டும் என்று ஜோதிட சாஸ்திரங்கள் கூறுகிறது.

இல்லையெனில் வாழ்க்கையில் பல தீமைகளை சந்திக்கக்கூடும்.

பூஜை அறை எந்த திசையில் அமைக்க வேண்டும்?
  • தென்கிழக்கு
  • வடமேற்கு
  • தெற்கு நடுப்பகுதி
  • மேற்கு நடுப்பகுதி

ஆகிய திசைகளில் மட்டுமே பூஜை அறைகளை அமைக்க வேண்டும். ஏனெனில் இந்த திசைகளில் வைக்கப்படும் பூஜை அறைகளினால் மட்டுமே நன்மைகள் உண்டாகும்.

எந்த திசையில் பூஜை அறை வைக்கக் கூடாது?

வடகிழக்கு, தென்மேற்கு ஆகிய திசைகளில் எக்காரணத்தை கொண்டும் வீட்டில் பூஜை அறைகளை வைக்கவே கூடாது. அப்படி வைத்தால் பல பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.

தவறான திசையில் பூஜை அறை வைப்பதன் தீமைகள்?
  • ஆண்கள் நல்ல வேலைக்கு போக முடியாத நிலை ஏற்படும். சில சமயம் வேலை அமையாமல் போகும்.
  • குடும்ப உறவான தந்தை, மகன் மற்றும் கணவன் மனைவி உறவுகளுக்கிடையே பிரிவினைகள் உண்டாகும்.
  • குடும்பத்தில் உள்ளவர்களுக்கு உடல்நலக் கோளாறுகள், விபத்துக்கள், வியாபார நஷ்டம், கடன் சுமைகள் ஆகியவை ஏற்படும்.

மேலும் ஆன்மீகம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்