ஏழரைச்சனியால் வரும் கஷ்டங்களுக்கு சிலர் சோர்ந்து போய்விடுவார்கள், அதை தடுக்க சில கோவில்களுக்கு சென்று வழிபட்டாலே ஏழரைச்சனியின் பாதிப்பில் இருந்து வென்றுவிடலாம்.
ஆதிகேசவ பெருமான் கோவில்
திருப்பெரும்புதூரில் அமைந்துள்ள ஆதிகேசவ பெருமான் கோவில் 500 முதல் ஆயிரம் வருடங்களுக்கு முன்னால் கட்டப்பட்டது.
மாசி பூரம், பங்குனி உத்திரம், சித்திரை கடைசி வெள்ளிக் கிழமைகளில் இந்த கோவிலுக்கு சென்றால் சனி பாதிப்பை குறைக்கலாம்.
நாமபுரீஸ்வரர் கோவில்
புதுக்கோட்டையில் ஆலங்குடி எனும் ஊரில் அமைந்துள்ள ஸ்ரீநாமபுரீஸ்வரர் கோவிலில் பிரதோஷ நாளில் சென்று இளநீர் சமர்ப்பித்து வழிபட வேண்டும்.
இங்குள்ள தட்சனாமூர்த்திக்கு கொண்டைக் கடலை மாலை சாற்றி வழிபடுவது புதன் தோஷத்திற்கு சிறப்பு வாய்ந்ததாகும்.
ஸ்ரீசுயம்பு பெருமாள் கோவில்
கோவையில் இருளர்பதி எனும் ஊரில் அமைந்துள்ள ஸ்ரீசுயம்பு பெருமாள் கோவிலுக்கு, சனிக்கிழமையில் சென்று துளசி மாலை அணிவித்து வழிபட்டால், சனி தோஷம் நீங்கி வாழ்வில் நலம் கிடைக்கும்.
பொங்கு சனீஸ்வரர் கோவில்
திருவாரூரில் திருக்கொள்ளிக் காடு எனும் ஊரில் அமைந்துள்ள பொங்கு சனீஸ்வரர் கோவிலில் சிறப்பு பரிகாரங்கள் நடைபெறும். சனிப்பெயர்ச்சி அன்று சென்றால் நல்ல பலனை பெற்லாம்.
ஸ்ரீயோக நரசிம்மர் கோவில்
திருவண்ணாமலையில் சோகத்தூர் எனும் ஊரில் அமைந்துள்ள ஸ்ரீயோக நரசிம்மரை, ஏகாதசி திதி நடைபெறும் நாளில் சென்று நெய்தீபம் ஏற்றி வணங்கினால் சகலமும் நன்மையில் முடியும்.
ஸ்ரீநாகேஸ்வரர் கோவில்
நாமக்கலில் பெரியமணலி எனும் ஊரில் அமைந்துள்ள ஸ்ரீநாகேஸ்வரர் கோவில். திருவாதிரை நட்சத்திரம் நடைபெறும் நாளில், சென்று வில்வம் சாற்றி வழிபடுவது மிகவும் சிறப்பு.
ஸ்ரீவிருத்தகிரீஸ்வரர் கோவில்
பெரம்பலூரில் வெங்கனூர் எனும் ஊரில் அமைந்துள்ள ஸ்ரீவிருத்தகிரீஸ்வரரை, பிரதோஷ நாளில் சென்று வணங்கினால் தொட்டதெல்லாம் துலங்கும் என்பது ஐதீகமாக உள்ளது.
திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர்
சீர்காழி-தரங்கம்பாடி பாதையில் அமைந்துள்ள திருக்கடையூர் கோவில் 2000 வருடங்கள் பழமையானது. இங்கு அருள்மிகு அமிர்தகடேஸ்வரரை வழிபடுவதுடன், அதன் அருகில் உள்ள ஈசனின் அருள் பெற்று திகழும் யமதர்மனையும் வணங்கினால் வாழ்வில் நலம் பெறலாம்.
குச்சனூர் சனி பகவான்
தேனியில் கண்டமனூர் எனும் ஊரில் அமைந்துள்ள குச்சனூரில், சுயம்பு வடிவாக எழுந்தருளி இருக்கும் ஸ்ரீசனீஸ்வரரை வணங்கினால் சகலப் பிரச்சனைகளும் நீங்கும்.
ஸ்ரீவாலீஸ்வரர் கோவில்
விழுப்புரத்தில் கோலியனூர் எனும் ஊரில் அமைந்துள்ள ஸ்ரீவாலீஸ்வரர் கோவிலில் தென்முகமாக அமைந்துள்ள சனீஸ்வர பகவானை வணங்கினால் ஏழரைச் சனி தாக்கம் குறையும்.
ஸ்ரீஆதிவராகப் பெருமாள் கோவில்
திருநெல்வேலியில் கல்லிடைக் குறிச்சியில் அமைந்துள்ள ஸ்ரீஆதிவராகப் பெருமாள் கோவிலில் ஏகாதசி திதி நடைபெறும் நாளில் நேர்த்திக்கடன் நிறைவேற்றினால் நன்மை கிடைக்கும்.
திருச்செந்தூர் முருகன் கோவில்
திருச்செந்தூரில் அமைந்துள்ள முருகன் கோவிலுக்கு சென்று வழிபாட்டால் ஏழரைச்சனி தாக்கத்தை குறைக்கலாம்.