விருச்சிகத்திலிருந்து தனுசுக்கு இடம்பெயர்ந்தார் சனிபகவான்

Report Print Fathima Fathima in ஆன்மீகம்
205Shares

இரண்டரை ஆண்டுகளுக்கு ஒருமுறை சனிபகவான் ஒரு ராசிலியிருந்து மற்றொரு ராசிக்கு இடம் பெயர்வார்.

இன்று செவ்வாய்கிழமை காலை 10.01 மணிக்கு(இந்திய நேரப்படி) மூலம் நட்சத்திரம் 1வது பாதத்தில் நீர் ராசியான விருச்சிகத்தில் இருந்து நெருப்பு ராசியான தனுசு ராசிக்கு இடம்பெயர்ந்துள்ளார்.

இம்முறை சனிபகவான் பார்வை கும்பம், மிதுனம், கன்னி ஆகிய ராசிகளின் மீது விழுகிறது.

திருநள்ளாறு ஸ்ரீ தர்பாரண்யேசுவரர் கோயிலில் ஸ்ரீ சனீஸ்வர பகவான் தனி சன்னதி கொண்டு அருள்பாலிக்கிறார்.

பொதுவாக உக்ரமூர்த்தியாகிய சனிபகவான் இக்கோயிலில் அனுக்ரக மூர்த்தியாக கிழக்கு நோக்கி அபயமுத்திரையுடன் அருள் வழங்குகிறார்.

இக்கோயிலில் வேறு நவகிரஹங்கள் பிரதிஷ்டை கிடையாது என்பது சிறப்பம்சமாகும்.

இந்நிலையில் பரிகார பூஜைகள் செய்ய காரைக்கால் மற்றும் புதுச்சேரி, தமிழகம் உள்பட பல்வேறு மாநிலங்களிலிருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் குவிவதால் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

மேலும் ஆன்மீகம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்