சனியின் பாதிப்பு இல்லாத அதிர்ஷ்ட ராசி: இந்த மூன்றும் தான்

Report Print Printha in ஆன்மீகம்
531Shares
531Shares
ibctamil.com

நவக்கிரகங்களின் ஒன்றான சனிபவகான் நாளை விருச்சிக ராசியில் இருந்து தனுசு ராசிக்கு சஞ்சாரம் செய்ய இருக்கிறார்.

நாளை நடக்க இருக்கும் சனிப்பெயர்ச்சியின் போது எந்தெந்த ராசியினரை சனி பகவான் பிடிக்கப் போகிறார் அதற்கான பரிகாரங்கள் என்னவென்பதை பார்க்கலாம்.

எந்த ராசிகளுக்கு சனிபகவானின் தாக்கம் இல்லை?

 • மேஷம் - அஷ்டம சனி முடிவடைகிறது.

 • ரிஷபம் - அஷ்டம சனி தொடங்க போகிறது.

 • மிதுனம் - கண்டக சனி தொடக்கம்.

 • கடகம் - சனியின் பாதிப்பு இல்லை.

 • சிம்மம் - அர்த்தாஷ்டம சனி முடிவு.

 • கன்னி - அர்த்தாஷ்டம சனி ஆரம்பம்.

 • துலாம் - ஏழரை சனி முடிவு.

 • விருச்சிகம் - பாத சனி தொடக்கம்.

 • தனுசு - ஜென்ம சனி ஆரம்பம்.

 • மகரம் - விரய சனி தொடக்கம்.

 • கும்பம் - சனியின் பாதிப்பு இல்லை.

 • மீனம் - சனியின் பாதிப்பு இல்லை.

சனி பிடியில் இருந்து தப்பிக்க என்ன செய்வது?

 • தினமும் காலையில் ஒரு கைப்பிடி அளவு உலர்திராட்சையை காகத்திற்கு அளிக்க வேண்டும்.

 • வன்னி மர விநாயகருக்கு பச்சரிசி மாவு படைத்தாலும், சனிக்கிழமையில் விர்டஹம் இருந்து எள் கலந்த தயிர் சாதம் படைத்தாலும் சனியின் தாக்கம் குறையும்.

 • திருநள்ளாறு சென்று சனி பகவானை வணங்கி வர தோஷம் நிவர்த்தியாகும்.

 • காகத்திற்கு தினமும் எள் கலந்த சாதத்தை வைப்பதன் மூலம் சனியால் ஏற்படும் வினைகளின் வீரியம் குறையும்.

 • கறந்த நாட்டு பசுவின் பாலை சனிக்கிழமை தோறும் சிவபெருமானுக்கு அபிஷேகம் செய்து வழிபடுவதன் மூலம் தோஷம் நிவர்த்தியாகும்.

 • பிரதோஷ வழிபாட்டை மேற்கொண்டால் சனி தோஷத்தினால் ஏற்படும் பிரச்சனைகளின் வீரியம் குறையும்.

 • நம் வீடுதேடி காகங்கள் வந்து கரைந்தால் அதற்கு உடனே உணவிட வேண்டும். அதனால் சனிபகவான், எமன் மற்றும் நம் முன்னோர்களின் ஆசீர்வாதம் கிடைக்கும்.

மேலும் ஆன்மீகம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்