எந்த கடவுளை எத்தனை முறை வலம் வர வேண்டும்?

Report Print Printha in ஆன்மீகம்

கோவிலுக்கு சென்று கடவுளை வணங்கி கோவில் சன்னதியை சுற்றி வலம் வந்து தனது வேண்டுதல்களை முடிப்பார்கள்.

ஆனால் அப்படி சுற்றி வரும் போது ஒவ்வொரு தெய்வத்தையும் ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையில் வலம் வந்து வழிபாடு செய்ய வேண்டும் என்பது ஒரு ஐதீகமாக உள்ளது.

எந்த கடவுளை எத்தனை முறை வலம் வர வேண்டும்?

 • விநாயகரை வணங்கும் போது ஒரு முறை தான் வலம் வர வேண்டும்.

 • ஈஸ்வரனையும், அம்மனையும் வணங்கும் போது 3 முறைகள் வலம் வர வேண்டும்.

 • அரச மரத்தை வணங்கும் போது 7 முறைகள் வலம் வர வேண்டும்.

 • மகான்களின் சமாதியை 4 முறைகள் வலம் வர வேண்டும்.

 • நவக்கிரகங்களை வணங்கி 9 முறைகள் வலம் வர வேண்டும்.

 • சூரியனை வணங்கும் போது 2 முறைகள் நம்மை நாமே சுற்றி கொள்ள வேண்டும்.

 • தோஷ நிவர்த்திக்காக பெருமாள் மற்றும் தாயாரையும் வணங்குபவர்கள் 4 முறைகள் வலம் வர வேண்டும்.

கடவுளை வணங்கும் போது பின்பற்ற வேண்டியவை?

 • கோவிலுக்குள் ஆலய பலிப்பீடம், கொடிக்கம்பம் முன்பு தான் சாஷ்டாங்கமாக விழுந்து வணங்க வேண்டும்.

 • கோவிலில் ஒவ்வொரு சுவாமிக்கும் தனித்தனியாக நமஸ்காரம் செய்யக் கூடாது.

 • கோவில் முன் இருக்கும் கொடி மரத்திற்கு வெளியில் விழுந்து நமஸ்காரம் செய்தால் அது அனைத்து கடவுளுக்கும் சேர்த்து நமஸ்காரம் செய்த புண்ணியம் கிடைக்கும்.

 • கடவுளுக்கு நமஸ்காரம் செய்யும் போது ஆண்கள் சாஷ்டாங்கம் என்ற பணிவு முறையிலும், பெண்கள் குனிந்தும் வணங்க வேண்டும்.

மேலும் ஆன்மீகம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்